`எப்போது வேண்டுமானாலும் கொலை செய்யப்படலாம்!’ - மர்ம மரணமடைந்த கேரள நர்ஸ் எழுதிய 18 பக்கக் கடிதம் | Police finds New evidence in kerala nurse mystery death case

வெளியிடப்பட்ட நேரம்: 19:45 (24/01/2019)

கடைசி தொடர்பு:06:18 (27/01/2019)

`எப்போது வேண்டுமானாலும் கொலை செய்யப்படலாம்!’ - மர்ம மரணமடைந்த கேரள நர்ஸ் எழுதிய 18 பக்கக் கடிதம்

அனலியா . செவிலியர்

கேரளாவில் மர்மமான முறையில் உயிரிழந்த அனலியா என்ற செவிலியரின் கொலையில் ஐந்து மாதங்களுக்குப் பிறகு 18 பக்க லெட்டர் கிடைத்துள்ளது. அதில் அவருடைய கணவர் குடும்பத்தாரால் தாம் கொலை செய்ய வாய்ப்பு இருப்பதாக அனலியா எழுதியிருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்து விரிவான விசாரணை நடத்த முதலமைச்சர்  பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். 

கேரளாவைச் சேர்ந்தவர் அனலியா..பி.எஸ்சி படித்த இவர், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி மாயமானதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார் அவருடைய கணவர் ஜஸ்டின். அந்தப் புகாரையடுத்து தேடுதல் வேட்டை நடத்திய போலீஸார் வடகீகாரா காவல் பிரிவுக்கு  உட்பட்ட பெரியார் ஆற்றில் பிணமாக இருந்த அனலியாவை மீட்டனர்.இந்த நிலையில் அனலியா இறப்புச் செய்தியைக் கேட்ட  சௌதியில் இருந்த அவருடைய தந்தை ஹூய்ஜென்ஸ் (HuygensParakkal.) கேரளா வந்துள்ளார். இறுதிச் சடங்கில் பங்கேற்றவருக்கு சில சந்தேகங்கங்கள் அவருக்கு எழுந்துள்ளது. பெங்களுருக்குச் செல்ல திரிச்சூர் ரயில்  நிலையம் வந்த அனலியா எப்படி எதிர்ப்பகுதி  இடத்தில் இறந்து கிடந்திருப்பார் என்ற சந்தேகம் அவருக்கு வலுத்துள்ளது. இதுதொடர்பாக போலீஸாரிடம் புகார் தெரிவித்தபோது, அதற்கு போலீஸார்  'அவருடைய கணவர் வீட்டாரால் அவருக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்றும் அவர் தற்கொலை செய்திருக்க வாய்ப்பு உள்ளது என்றும் முடித்துள்ளனர்.

 கொலை செய்யப்பட்ட அனலியா

இந்த நிலையில், அனலியாவின் டைரியும் கிடைத்துள்ளது.  அந்த டைரியில் பல கைகளில் ஒரு பெண்ணை சித்ரவதை செய்வது போன்றும், கண்ணீரோடு ஒருபெண் பயந்தவாறும் கடிதம் எழுதுவது போன்றும் அதில் வரையப்பட்டுள்ளது. அது மட்டுமன்றி 18 பக்க லெட்டரும் கிடைத்துள்ளது. அந்த லெட்டரில் அனலியா அவருடைய அழகான கனவுகளை கண்ணீர்மல்க  கரைய விட்டுள்ளார். திருமணம் முடிந்து நல்ல வேலை, நல்ல சம்பளம், வீடு கார் என அழகான வாழ்கை வாழ தாம் எண்ணியிருந்ததாக கூறியிருக்கிறார். மேலும், தன்னுடைய கணவர் பணியாற்றிய நிறுவனத்திலிருந்து அவரை நீக்கிய நிலையில், செவிலியர் பணியை தம்மையும் உதறும்படி அவருடைய கணவர் சித்ரவதை செய்ததாக கூறியுள்ளார். வேலை கைவிட்டு கேரளா வந்த அனலியாவுக்கு கருத்தரிப்பது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், குழந்தை பிறந்தால் பிரச்னை சரியாகி விடும் என்று  நம்பியவருக்கு  மேலும், அவரை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் அவருடைய மாமியாரும் கணவரும் சித்ரவதை செய்துள்ளனர். 

அனலியா இறப்பதற்கு முன்பு அவருடைய சகோதருக்கு  குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். அதில் தாம் எந்த நேரத்திலும் கொலை செய்யப்படலாம். அப்படியான  கொடூரத்தை தன் கணவரால் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும் கூறியுள்ளார். மேலும், தமக்கு என்ன நேர்ந்தாலும் ஜஸ்டின் குடும்பத்தார் தான் காரணம் என எழுதியுள்ளார். இந்த லெட்டர், டைரி மற்றும் குறுஞ்செய்தியை எடுத்துக்கொண்டு சென்று அவருடைய தந்தை  ஹூய்ஜென்ஸ் (Huygens) முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்து முறையிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து இந்தக் கொலையை விசாரிக்க முதலமைச்சர் பினராயி விஜயன் புலனாய்வுக் குழுவுக்கு உத்தரவுப் பிறப்பித்துள்ளார். இந்தநிலையில், அனலியாவின் கணவர் ஜஸ்டின் சாவக்காடு நடுவர் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் சரணடைந்திருக்கிறார். அவரை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.