'இந்தியன்-2', `ராஜஸ்தான் ராயல்ஸ்’ -2019 -ல் அபிஷேக் பச்சனின் பிளான் | 'Indian-2', Rajasthan Royals- which is Abhishek Bachchan's next choice?!

வெளியிடப்பட்ட நேரம்: 05:00 (25/01/2019)

கடைசி தொடர்பு:07:25 (25/01/2019)

 'இந்தியன்-2', `ராஜஸ்தான் ராயல்ஸ்’ -2019 -ல் அபிஷேக் பச்சனின் பிளான்

ஸ்போர்ட்ஸ் மற்றும் சினிமா ஆகிய இரண்டிலும் தனது ஆர்வத்தை தொடர்ந்து காட்டிவரும் அபிஷேக் பச்சனுக்கு இந்த ஆண்டும் இவ்விரண்டிலும் பங்கேற்க வாய்ப்பு வந்துள்ளது. அதாவது, 2019 மார்ச் மாதம் நடக்கவிருக்கும் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் அபிஷேக் பச்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஒரு பங்கை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே ராஜஸ்தான் ராயல் அணியின் உரிமையை நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா வாங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தியன் 2

மேலும், கமல் நடிப்பில் தயாராகிக்கொண்டிருக்கும் `இந்தியன்-2' திரைப்படத்தில் அபிஷேக் பச்சனை நடிக்க வைக்க இயக்குநர் ஷங்கர் அணுகினார் என்ற தகவலும் வெளிவந்துள்ளது. இப்படத்தில் இவருக்கு வில்லன் ரோல்! இந்த ரோலுக்கு ஏற்கெனவே, இயக்குநர் ஷங்கர் அஜய் தேவ்கன், அக்ஷய் குமார் ஆகியோரை அணுகினார் என்பது குறிப்பிடத்தக்கது. அஜய் தேவ்கன் இந்த ரோலில் நடிக்க விருப்பம் இல்லை என்றும், அக்ஷய் குமார் கால்சீட் நெருக்கடியால் நடிக்க இயலவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். எனவே, தற்போது படக்குழு அபிஷேக் பச்சனின் பதிலுக்காக காத்திருக்கிறது. 'ராவணன்' படம்போல் தமிழில் மீண்டும் வில்லனாக அபிஷேக் பச்சன் நடிக்கவிருப்பாரா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.