`16 மாதம்.. 3,000 என்கவுன்டர்! - சைலன்டாக கிரிமினல்களுக்கு செக் வைத்த யோகி ஆதித்யநாத் | Yogi adityanath government's encounter list

வெளியிடப்பட்ட நேரம்: 12:39 (25/01/2019)

கடைசி தொடர்பு:12:51 (25/01/2019)

`16 மாதம்.. 3,000 என்கவுன்டர்! - சைலன்டாக கிரிமினல்களுக்கு செக் வைத்த யோகி ஆதித்யநாத்

`யோகி ஆதித்யநாத் சற்று வித்தியாசமான முதல்வர்’ என்று  பா.ஜ.க-வினர் பெருமிதம் கொள்வது வழக்கம். உத்தரப்பிரதேசத்தில் ஆட்சிக்கு வந்ததில் இருந்து யோகி காட்டும் அதிரடிகளுக்கு எண்ட் கார்டே கிடையாது. அதற்கு ஒரு சின்ன உதாரணம். 

யோகி
 

குடியரசு தினத்தன்று யோகி ஆதித்யநாத் அரசு தன் சாதனைகளைப் பட்டியலிட்டு அறிக்கையாக வெளியிட முடிவு செய்தது. உத்தரப் பிரதேசத்தின் தலைமைச் செயலாளர் அனுப் சந்திரபாண்டே, அனைத்து மாவட்ட நீதிபதிகளுக்கும் அந்த அறிக்கையை அனுப்பி வைத்தார்.  அந்த அறிக்கையின் ஹைலைட்டே உ.பி போலீஸின் என்கவுண்டர் பட்டியல்தான். 

யோகி ஆதித்யநாத் 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் உ.பி முதல்வராக பதவியேற்றார். அவர் பதவியேற்று ஏறக்குறைய 2 ஆண்டுகள் நிறைவடைகிறது. யோகி பதவியேற்றதும் முதல் வேலையாக உ.பி-யில் உலாவிய கேங்க்ஸ்டர்களுக்கு செக் வைக்கத் தொடங்கினார். 

யோகி
 

யோகி பதவிக்கு வந்து 16 மாதங்களில் அதாவது 2017 மார்ச் - 2018 ஜூலை வரையிலான காலகட்டத்தில், 3036 என்கவுன்டர்கள் நடத்தப்பட்டுள்ளன. அதில் 78 கிரிமினல்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். 7,043 கிரிமினல்கள் கைது செய்யப்பட்டனர். 838 கிரிமினல்கள் காயமடைந்துள்ளனர். அதே காலகட்டத்தில் 11,981 கிரிமினல்களின் பெயில் ரத்து செய்யப்பட்டு சிறையில் அடைத்து வைக்கப்பட்டனர். கூடுதலாக நியமிக்கப்பட்ட அதிரடிப்படை  ஒன்பது கிரிமினல்களை சுட்டுக்கொன்று, 139 பேரைக் கைது செய்தது. இந்தத் தரவுகள் அனைத்தும் உ.பி அரசின் சாதனைப் பட்டியலில் குறிப்பிடப்பட்டவை. இந்தத் தரவுகளை வைத்துப் பார்க்கும்போது 16 மாத காலகட்டத்தில், ஒவ்வொரு நாளும் சராசரியாக ஆறு என்கவுன்டர்கள் நடந்துள்ளன. ஒரு நாளைக்கு 14 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

யோகியின் என்கவுன்டர் பட்டியல் தேசியளவில் அனைத்து கட்சியினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  மேலும், அதே அறிக்கையில் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்தது, கரும்பு விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை கொடுத்தது உள்ளிட்டவையும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க