தடுமாறி விழுந்த போட்டோகிராஃ-பர்; பதறிய ராகுல் காந்தி! | Rahul Gandhi hurries to Photographer rescue in Bhubaneshwar

வெளியிடப்பட்ட நேரம்: 16:15 (25/01/2019)

கடைசி தொடர்பு:16:15 (25/01/2019)

தடுமாறி விழுந்த போட்டோகிராஃ-பர்; பதறிய ராகுல் காந்தி!

விரைவில் நாடாளுமன்றத் தேர்தல்  தேதி  அறிவிக்கப்பட உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே, காங்கிரஸ் கட்சி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. கட்சித் தலைவர்கள் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.

காங்கிரஸ் தலைவர்

உத்தரப்பிரதேசத்தில், இரண்டு நாள்களுக்கு முன் பிரசாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி, தற்போது ஒடிசா மாநிலத்தில் பிரசாரம் செய்து வருகிறார்.  இதற்காக புவனேஷ்வர் வந்த அவர், விமான நிலையத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருந்தார். அவரை புகைப்படம் எடுக்க போட்டோகிராஃபர்கள் சுற்றிலும் திரண்டு நின்றுகொண்டிருந்தனர். 

ராகுல்

இந்தச் சமயத்தில், போட்டோகிராஃபர் ஒருவர் நிலைதடுமாறி சாலையில் விழுந்தார். இதைப் பார்த்த ராகுல் காந்தி, உடனடியாக போட்டோகிராஃபரை நோக்கி வந்து அவர் எழுவதற்கு உதவினார். காங்கிரஸ் கட்சித் தலைவரின் இந்தச் செயல், பொதுமக்களால் பாராட்டப்பட்டது. இணையத்திலும்  பாராட்டுகள் குவிந்தது. 

முன்பெல்லாம் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்துக்குச் செல்லும்போது, விவசாயிகள்  வீட்டில் படுத்துறங்கி, அவர்கள் வீட்டிலேயே உணவு அருந்துவார். 'இதுவெல்லாம் தேர்தல் நேர ஸ்டன்ட்.  இயல்பான விஷயமாகத் தெரியவில்லை' என மக்கள் அவரைக் கேலிசெய்தனர். ஊடகங்களும் விமர்சித்தன. ஆனால், புவனேஷ்வரில் இன்று காங்கிரஸ் தலைவர் நடந்துகொண்ட விதத்தை மக்கள் மனதாரப் பாராட்டி வருகின்றனர். 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க