இந்தியாவின் இரண்டாம் பெரிய கொய்யா! - அறிமுக உரிமை கோரிய தோட்டக்கலைத் துறை | India's second largest size guava

வெளியிடப்பட்ட நேரம்: 18:45 (25/01/2019)

கடைசி தொடர்பு:18:45 (25/01/2019)

இந்தியாவின் இரண்டாம் பெரிய கொய்யா! - அறிமுக உரிமை கோரிய தோட்டக்கலைத் துறை

12 வருட ஆராய்ச்சிக்குப் பிறகு இந்தியாவின் இரண்டாம் பெரிய கொய்யாவை இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் அறிமுகப்படுத்தியாக உரிமை கோரியுள்ளது. 2018-ம் ஆண்டே இந்த கொய்யா அர்கா பூர்ணா(Arkha poorna) என்ற பெயரில் சந்தைப்படுத்தப்பட்டது.

கொய்யா

இந்த கலப்பின கொய்யாவைக் கர்நாடகா மற்றும் பிற இந்திய மாநிலங்களில் விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். இதன் விலை ஒரு கிலோ 40 - 50 ரூபாய் என விற்கப்படுகிறது. பழ பயிர் பிரிவின் முக்கிய விஞ்ஞானி சி.வாசுகி "அர்கா பூர்ணா கொய்யாவில் விதைகள் கொஞ்சம் மட்டுமே இருக்கும். அதனால் அப்படியே உண்ண ஏற்புடையது. வைட்டமின் - சி சத்து அதிகம் உள்ளது. இதை நட்டு 5 வருடங்களில் பழங்களை பறிக்கலாம். ஒரு மரத்தில் இருந்து வருடத்திற்கு 50 - 80 கிலோ கொய்யாக்கள் கிடைக்கும். ஆனால் மரம் போல் வளரக் கூடிய தன்மையால் வீட்டு மாடிகளில் இதை வளர்க்க முடியாது. இதன் சதை பகுதி வெள்ளை அல்லது சிவப்பு நிறத்தில் இருக்கலாம். 20 - 30 டிகிரியில் நன்கு வளரும்" என்கிறார்.

விஞ்ஞானி சங்கரன் கூறுகையில், ``12 வருடமாக உழைத்து பர்பள் லோகல் (Purple local) மற்றும் அலகாபாத் சஃபேடா (Allahabad safeda) வகையின் கலப்பின பயிராக அர்கா பூர்ணாவை அறிமுகப்படுத்தினோம். அலகாபாத் சஃபேடா இந்தியாவில் பெரிய கொய்யா வகையில் ஒன்று. இதன் ஒரு பழம் 200 - 220 கிராம் எடை கொண்டது. இதன் கலப்பினமான அர்கா பூர்ணாவின் ஒரு பழம் 200 - 230 கிராம் வரை எடையுடன் உள்ளது. இந்தியாவின் முதல் பெரிய கொய்யா சத்திஸ்கரில் விபின்-பிஹி என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டது. விபின்-பிஹி 300 - 1250 கிராம் எடை இருக்கும்.ஆனால் இதை விட அர்கா பூர்ணாவின் சதை பகுதி அதிகம். மேலும் இரண்டு அதிக மகசூல் தரக்கூடிய மாம்பழம், சப்போட்டா வகைகளும், வைரஸ் எதிர்ப்புத்திறன் கொண்ட மாதுளை, பப்பாளி மற்றும் திராட்சை பழங்களுக்கான ஆராய்ச்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்றார்.

கொய்யா

சதாசிவா எனும் காய்கறி பிரிவு விஞ்ஞானி, அர்கா அபெட்(Arkha abhed) என்னும் அதிக மகசூல் தரும் தக்காளி ரகமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறினார். அர்கா அபெட் மற்ற ரக தக்காளியை விட 5- 10 சதவிகிதம் அதிக  ஊட்டச்சத்து கொண்டது. முக்கியமாகப் புற்றுநோய் எதிர்ப்பு சக்தியை உடையது. இந்த ரகம் மென்மையானது. அதிக பழச்சாறு உள்ளதால் நுகர்வோர் விரும்புகிறார்கள்" என்கிறார்.

விவசாயிகளின் நலன் கருதி இதுபோன்ற புதிய ரகங்களை ஆராய்ச்சி மையங்கள் வெளியிட்டு வருகிறது.