`கடனோ ரூ.23,000; தள்ளுபடியோ ரூ.13' - அரசின் மெத்தனத்தால் விழி பிதுங்கும் மத்தியப்பிரதேச விவசாயி | Madhya Pradesh farmer Receives Loan Waiver Of Rs 13

வெளியிடப்பட்ட நேரம்: 19:48 (25/01/2019)

கடைசி தொடர்பு:20:38 (25/01/2019)

`கடனோ ரூ.23,000; தள்ளுபடியோ ரூ.13' - அரசின் மெத்தனத்தால் விழி பிதுங்கும் மத்தியப்பிரதேச விவசாயி

விவசாயத்துக்காக லோன் வாங்கியிருந்த மத்தியப்பிரதேச விவசாயிக்கு விநோதமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

விவசாயி

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக வங்கியில் வாங்கிய கடனுக்காக விவசாயிகள் உயிரிழப்பது அதிகமாகி வருகிறது. இதனால் வங்கிக் கடன்களை ரத்து செய்ய வேண்டும் என நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் ஒருமித்த குரல் எழுப்பிப் போராடி வருகின்றனர். இதற்கிடையே, மத்தியப்பிரதேசத்தில் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி ஆட்சிக்கு வந்ததும் தற்போது விவசாயக் கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பை வெளியிட்டு படிப்படியாக விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு வருகின்றன. 

ஷிவ்லால் கதாரியா

இந்நிலையில், மத்தியப்பிரதேசத்தின் அகர் மால்வா மாவட்டத்தைச் சேர்ந்த ஷிவ்லால் கதாரியா என்னும் விவசாயி விவசாயப் பணிகளுக்காக ரூ.23,000 வங்கியில் கடன் வாங்கியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் அறிவிப்பின்படி இவரது கடன் தள்ளுபடிக்கான நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. மொத்தம் வாங்கிய ரூ.23,000 கடனுக்கு வெறும் 13 ரூபாய் மட்டுமே தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது. இதைப் பார்த்த அவர் அதிர்ச்சியடைந்தார். 2 லட்சம் ரூபாய் வரை கடன் தள்ளுபடி செய்யப்படும் என மாநில அரசு அறிவித்திருந்தது. அப்படி இருக்கையில் 23,000 கடனுக்கு 13 ரூபாய் மட்டும் தள்ளுபடி செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. 

வங்கிக் கடன்

``நான் ஒரு நேர்மையான விவசாயி. வாங்கிய கடனுக்காக இதுவரை தொடர்ந்து வட்டி கட்டி வருகிறேன். அப்படி இருந்தும் இப்படி நடந்துள்ளது. தள்ளுபடி திட்டம் சரியான ஒழுங்குமுறை இல்லாமல் உள்ளது. அதிகாரிகளிடத்தில் புகார் தெரிவித்துள்ளேன்" எனக் கூறுகிறார் விவசாயி ஷிவ்லால் கதாரியா. இது மத்தியப்பிரதேச அரசில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க