மத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிப்பு - பிரபுதேவா, கெளதம் கம்பீருக்கு பத்ம ஸ்ரீ விருது! | Gautam Gambhir among 112 recipients of Padma Awards

வெளியிடப்பட்ட நேரம்: 22:17 (25/01/2019)

கடைசி தொடர்பு:22:17 (25/01/2019)

மத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிப்பு - பிரபுதேவா, கெளதம் கம்பீருக்கு பத்ம ஸ்ரீ விருது!

இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் பிரபுதேவா, கெளதம் கம்பீர் உள்ளிட்ட 112 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

பிரபுதேவா

அரசியல், சமூகம், நிர்வாகம், கலை, கலாச்சாரம், இசை, நடனம், சினிமா, நாடகம், ஓவியம், சிற்பம், சட்டம், நீதி, பொதுச் சேவை சமூக நலம் போன்ற பல்வேறு துறைகளில் சிறந்த முறையில் பணியாற்றியவர்களைக் கண்டறிந்து, அவர்களைக் கௌரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் பத்மஸ்ரீ, பத்ம விபூஷண், பத்ம பூஷண் உள்ளிட்ட விருதுகள் வழங்கப்படும். இவ்விருதுகளை 'பத்ம விருதுகள்' என்று குறிப்பிடுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் 112 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 94 பேர் பத்ம ஸ்ரீ விருதும், 4 பேருக்கு பத்ம விபூஷண் விருதும், 14 பேருக்கு பத்ம பூஷண் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கெளதம் கம்பீர்

கிரிக்கெட் வீரர் கெளதம் காம்பீர், தமிழகத்தை சேர்ந்த நடிகர் பிரபுதேவா, பங்காரு அடிகளார், பாடகர் சங்கர் மகாதேவன், சமூக சேவகர் மதுரை சின்னப்பிள்ளை, ட்ரம்ஸ் சிவமணி, மருத்துவர் ஆர்.வி. மணி, நர்த்தகி நடராஜ், டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல், மருத்துவர் வெங்கடசாமி, கண்மருத்துவர் ரமணி, கால்பந்து வீரர் சுனில் சேத்ரி, மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, நடிகர் மனோஜ் பாஜ்பாயி உள்ளிட்டோருக்குப் பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

மோகன் லால்

இதேபோல் இஸ்ரோ முன்னர் ஆய்வாளர் நம்பி நாராயணன் மற்றும் பத்திரிகையாளர் குல்தீப் நய்யார், முன்னாள் லோக் சபா துணைத் துணைத் தலைவர் கரியா முண்டா மற்றும்  பிரபல மலையாள நடிகர் மோகன் லால் ஆகியோருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் டீஜன்பாய், இஸ்மாயில் ஓமர், அனில்பாய், பல்வந்த் மோரேஷ்வர் ஆகிய 4 பேருக்கு  பத்ம விபூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க