அருண் ஜெட்லி அதிருப்தி... - டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்ட சி.பி.ஐ அதிகாரி! | cbi officer transferred who signed fir against chanda kochhar

வெளியிடப்பட்ட நேரம்: 09:55 (28/01/2019)

கடைசி தொடர்பு:10:01 (28/01/2019)

அருண் ஜெட்லி அதிருப்தி... - டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்ட சி.பி.ஐ அதிகாரி!

2012-ம் ஆண்டு, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் தலைவராக சந்தா கோச்சார் பணியாற்றியபோது வீடியோகான் நிறுவனத்துக்கு ரூ.3,250 கோடி ரூபாய் கடன் வழங்கியது. இதில் ரூ.2,800 கோடிக்கு மேல் கடன் திருப்பிச் செலுத்தப்படாமல் இருந்ததால் வாராக்கடனாக அறிவிக்கப்பட்டது. மேலும், சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சாரின் நிறுவனத்தில் வீடியோகான் நிறுவனம் முதலீடு செய்திருந்தது தெரியவந்தது. எனவே, இந்த வாராக்கடன் மோசடியில் இவரின் கணவருக்கும் தொடர்புள்ளதாகக் குற்றம்சாட்டப்பட்டது. 

சந்தா கோச்சார்

இந்த விவகாரம் குறித்து சி.பி.ஐ விசாரணையில் நடத்திய நிலையில் வங்கியின் சார்பில் சந்தா கோச்சாரிடம் விசாரணை நடந்து வந்தது. விசாரணையால் பதவிக்காலம் முடியும் முன்பே தனது பதவியை ராஜினாமா செய்தார் சந்தா. இதற்கிடையே, மோசடி உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து சந்தா, தீபக் மற்றும்  வீடியோகான் தலைவர் வேணுகோபால் தூத் மூவர் மீதும் சமீபத்தில் சி.பி.ஐ முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்தது. மேலும் மும்பை, ஔரங்காபாத் உள்ளிட்ட 4 இடங்களில் சந்தா கோச்சார் கணவரின் அலுவலகம், வீடியோகான் நிறுவனங்களிலும் சி.பி.ஐ அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்திவருகின்றனர்.

அருண் ஜெட்லி

சி.பி.ஐ-யின் இந்த நடவடிக்கைக்கு மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி அதிருப்தி தெரிவித்திருந்தார். இது கடும் விமர்சனங்களை ஏற்படுத்திய நிலையில், சந்தா கோச்சார் மீது எஃப்.ஐ.ஆர் பதிந்த சி.பி.ஐ அதிகாரி சுதன்ஷு மிஸ்ரா நேற்று அதிரடியாக டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டுள்ளார். ராஞ்சி சி.பி.ஐ பொருளாதார குற்றப்பிரிவுக்கு மிஸ்ரா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க