மருத்துவர்களின் சாதி, மத விவரங்கள் சேகரிப்பதா? - சர்ச்சையில் சிக்கிய எய்ம்ஸ் | AIIMS administration seeks caste and religion of doctors

வெளியிடப்பட்ட நேரம்: 12:55 (28/01/2019)

கடைசி தொடர்பு:12:55 (28/01/2019)

மருத்துவர்களின் சாதி, மத விவரங்கள் சேகரிப்பதா? - சர்ச்சையில் சிக்கிய எய்ம்ஸ்

ய்ம்ஸ் மருத்துவமனையில் இயக்குநர் முதல் சாதாரண டாக்டர் வரை அனைவரின் சாதி, மத விவரங்களைத் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

எய்ம்ஸ்

இதற்காக அனைவருக்கும் பாரம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. அதில் எய்ம்ஸ் மருத்துவமனையில் பணிக்குச் சேர்ந்த நாள், சம்பள விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன. அதோடு சாதி, மத விவரங்களையும் குறிப்பிடும்படி கூறப்பட்டுள்ளது. சாதி, மத விவரங்களைக் குறிப்பிடும்படி கூறியதால் பல மருத்துவர்கள் கடும் கோபம் அடைந்தனர். கடும் ஆட்சேபனையும் தெரிவித்தனர். 

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் டாக்டர். ரந்தீப் குலேரியா, `தனக்கு பாரம் வழங்கப்பட்டது குறித்து எந்தத் தகவலும் வரவில்லை’ என்கிறார். மேலும், அவர் கூறுகையில், ‘எந்தச் சூழலிலும் இந்த மருத்துவமனையில் சாதி, மத பாகுபாடுகள் பார்க்கப்படுவதில்லை’ என்றும் தெரிவித்தார். 

எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகத் தரப்பில் கூறுகையில், தவறுதலாக இது போன்ற கேள்வி கொடுக்கப்பட்ட பாரத்தில் இடம் பெற்று விட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. நிர்வாகப் பிரிவு தலைவர் டாக்டர் சஞ்சய் ஆர்யா, விநியோகிக்கப்பட்ட பாரங்களைத் திரும்பப் பெற உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க