`குடும்பத்துடன் ஒரு முறை; அமைச்சர்களுடன் ஒரு முறை’ - மகனின் படத்தைப் பார்த்து மகிழ்ந்த முதல்வர்! | HD Kumaraswamy Watches Son's Film With Family

வெளியிடப்பட்ட நேரம்: 13:40 (28/01/2019)

கடைசி தொடர்பு:13:40 (28/01/2019)

`குடும்பத்துடன் ஒரு முறை; அமைச்சர்களுடன் ஒரு முறை’ - மகனின் படத்தைப் பார்த்து மகிழ்ந்த முதல்வர்!

அரசியல்வாதிகளின் வாரிசுகள் அரசியலுக்கு வரும் காலம் மாறிப்போய், இப்போது அவர்கள் சினிமாவில் அறிமுகமாகி வருகின்றனர். அந்தவகையில் சில மாநிலங்களில் அரசியல்வாதிகளின் வாரிசுகள் சினிமாவில் கோலாச்சி வருகின்றனர்.

சித்தராமையா

அந்த வரிசையில் கர்நாடக முதல்வர் குமாரசாமி மகன் நிகில் கௌடாவும் இணைந்துள்ளார். 2016-ம் ஆண்டே இவர் `ஜாக்குவார்’ படம் மூலம் சினிமா துறைக்கு வந்தவர். இந்தநிலையில், நிகில் நடிப்பில் இரண்டாவதாக உருவாகியுள்ள படம் `சீதா ராமா கல்யாணா.’ மகனுக்காகக் குமாரசாமியே இரண்டாவது முறையாக மனைவியின் பெயரில் தயாரித்துள்ளார். கடந்த 25-ம் தேதி வெளியான இப்படம் குடும்பங்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

பரமேஸ்வர்

இந்நிலையில், நிகிலின் `சீதா ராமா கல்யாணா' திரைப்படத்தை நேற்று கர்நாடக முதல்வர் குமாரசாமி தன் தந்தை தேவ கௌடா, தன் தாயார் மற்றும் குடும்பத்துடன் பெங்களூரு திரையரங்கில் கண்டுகளித்தார். முன்னதாக, படம் ரீலீஸாவதற்கு முந்தைய நாளே முன்னாள் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் பரமேஸ்வர் என தன் அமைச்சரவை சகாக்களுடன் சென்று இதே திரைப்படத்தைப் பார்த்தார். 

குமாரசாமி

ஒருமுறைக்கு இருமுறை மகனின் திரைப்படத்தைப் பார்த்து ரசித்துள்ளார் குமாரசாமி. இதைக் கர்நாடக பா.ஜ.க விமர்சித்துள்ளது. ``உங்கள் மகனின் திரைப்படத்தை ஊக்குவிக்க நீங்கள் திரையரங்குகளில் செலவிடுகின்ற அதே அளவு முயற்சியைக் கர்நாடகாவில் வறட்சியைச் சமாளிப்பதற்கான ஒரு தீர்வைக் கண்டுபிடித்திருந்தால் 377 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருக்க மாட்டார்கள்" என்று ட்விட்டரில் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க