உலகின் முதல் 100 சிறந்த நிறுவனங்களின் பட்டியலில் டாடா!  | Tata ranked in 100 Global brands list

வெளியிடப்பட்ட நேரம்: 20:32 (28/01/2019)

கடைசி தொடர்பு:20:32 (28/01/2019)

உலகின் முதல் 100 சிறந்த நிறுவனங்களின் பட்டியலில் டாடா! 

2019-ம் ஆண்டில், டாடா குழுமத்தின் பிராண்ட் மதிப்பு 37 சதவிகிதம் அதிகரித்து, 19.5 பில்லியன் டாலரை எட்டியுள்ளதாகவும், இதன் மூலம் இந்தியாவின் முதல் மதிப்பு மிக்க பிராண்டாக மாறி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ப்பு விற்பனை முதல் மென்பொருள் சேவை வரை பல தொழில்களில் புகழ்பெற்று விளங்கும் டாடா குழுமம், இந்தியாவின் மிகவும் மதிப்பு மிக்க பிராண்டுகளில் ஒன்றாகவும், உலகின் முதல் 100 சிறந்த நிறுவனங்களில் ஒன்றாகவும் இடம் பிடித்துள்ளது. 

டாடா குழுமம்

லண்டனைச் சேர்ந்த பிராண்ட் மதிப்பீட்டு ஆலோசனை நிறுவனமான பிராண்ட் ஃபைனான்ஸ், இது தொடர்பாக வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், 2019-ம் ஆண்டில், டாடா குழுமத்தின் பிராண்ட் மதிப்பு 37 சதவிகிதம் அதிகரித்து, 19.5 பில்லியன் டாலரை எட்டியுள்ளதாகவும், இதன் மூலம் இந்தியாவின் முதல் மதிப்பு மிக்க பிராண்டாக மாறி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் இந்தக் குழுமத்தின் இந்த வளர்ச்சி, அந்த நிறுவனத்தை உலகின் முதல் 100 சிறந்த நிறுவனங்களில் ஒன்றாக உயர்த்தியுள்ளதாகவும், கடந்த 2018-ம் ஆண்டில் 104-வது இடத்தில் இருந்த நிலையில், தற்போது 86-வது இடத்துக்கு உயர்ந்துள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. 

தங்கள் நிறுவனத்துக்குக் கிடைத்துள்ள இந்தப் பெருமை குறித்து கருத்து தெரிவித்துள்ள  டாடா சன்ஸ் நிறுவன தலைவர் என். சந்திரசேகரன்,  தங்களுக்குக் கிடைத்துள்ள இந்த அங்கீகாரம், எங்கள் தொழிலை மேலும் சமூக பொறுப்புடன் செய்வதற்கான ஊக்கத்தைக் கொடுத்துள்ளதாகவும், தொடர்ந்து தொழில் புதுமையாகவும் திறமையாகவும் செயல்பட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

டாடா நிறுவனம்

உலகின் முதல் 100 சிறந்த நிறுவனங்களில் ஒன்றாக இக்குழுமம் வளர்ச்சி அடைந்துள்ளதற்கு, அந்த நிறுவனத்துக்கு வருவாயைக் கொட்டிக்கொடுக்கக்கூடிய காமதேனுவாகப் பார்க்கப்படும் டாடா கன்சல்டன்ஸி நிறுவனத்தின் மென்பொருள் ஏற்றுமதி சேவை தொழில்தான் முக்கிய காரணம் என்றும், கூடவே அக்குழுமத்தில் இடம்பெற்றுள்ள  வாகன மற்றும்  இரும்பு தயாரிப்பு நிறுவனங்களின்   பங்களிப்பு இருப்பதாகவும்   பிராண்ட் ஃபைனான்ஸ் தெரிவித்துள்ளது. 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க