`அவர் எனக்கு சகோதரி போன்றவர்!’ - சர்ச்சைக்குப் பின் விளக்கமளித்த சித்தராமையா | Former Karnataka Chief Minister and Congress leader Siddaramaiah misbehaves with a woman at a public meeting in Mysuru.

வெளியிடப்பட்ட நேரம்: 20:11 (28/01/2019)

கடைசி தொடர்பு:20:11 (28/01/2019)

`அவர் எனக்கு சகோதரி போன்றவர்!’ - சர்ச்சைக்குப் பின் விளக்கமளித்த சித்தராமையா

 மைசூரில், கட்சி தொடர்பாக  நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில், பெண் ஒருவர் சித்தராமையாவிடம் தொடர்ந்து கேள்வி எழுப்பிக்கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த சித்தராமையா, அந்தப்பெண்ணிடம் சற்று கடுமையாக நடந்துகொண்டார். வார்த்தைகளால் அவரைக் காயப்படுத்தினார்.

சித்தராமையா

சித்தராமையா கலந்துகொண்ட கூட்டம், மைசூரில் உள்ள கர்கேஷ்வரி கிராமத்தில் நடைபெற்றது. இது, சித்தராமையாவின் மகன் யாதின்ரா வெற்றிபெற்ற தொகுதியாகும். ஆனால், அவர் தொகுதி பக்கமே வருவதில்லை என்றும், அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் அந்தப் பெண் புகார் வாசித்துள்ளார்.  அதைக் கேட்ட அவர், அந்தப் பெண்ணை அமரச்சொன்னார். கீழே அமர்ந்தவர்  மீண்டும் எழுந்து, ஆக்ரோஷமாகப் பேசினார். ஏதுவாக இருந்தாலும் அலுவலகத்தில் வந்து சந்தித்துப் பேசுங்கள் என்றார். ஆனால் அவர், மேஜை அருகே வந்து தொடர்ந்து பேச முற்பட்டார்.  அப்போது சித்தராமையா,  சற்று கடுமையாக, நீங்கள் எத்தனை முறை என்னை நேரில் வந்து பார்த்து இந்த விவகாரம் குறித்துப் பேசியுள்ளீர்கள். நான் ஒவ்வொரு முறையும் இங்கு வரும்போது உங்களுக்குக் கடிதம் எழுதிவிட்டு வர முடியுமா? நீங்கள்தான் என்னை அலுவலகத்தில் வந்து பார்க்க வேண்டும் என்றார். மேலும், அந்தப் பெண்ணின் கையில் வைத்திருந்த மைக்கைப் பிடித்து இழுத்தார். அவர், மைக்கை துப்பட்டாவுடன் சேர்த்துப் பிடித்திருந்தால் துப்பட்டாவும் கையோடு வந்தது.

இந்தக் காட்சிகள் அனைத்தும் வீடியோவில் பதிவாகியிருந்தன. அதற்குள், 'முன்னாள் முதலமைச்சர் ஒரு பெண்ணின் துப்பட்டாவை இழுத்துவிட்டார்' என்ற செய்தி காட்டுத்தீயாகப் பரவ ஆரம்பித்தது. சமூக வலைதளத்தில் கண்டனக் குரல்கள் எழுந்தன. 

 

 

 

 

காங்கிரஸ்

 

சித்தராமையாவிடம் வாக்குவாதம் செய்த பெண், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் என்றும், அப்பகுதியில் சில பொறுப்புகளை வகித்தார் என்பதும் தெரியவந்ததுள்ளது. இந்தச் சம்பவம் குறித்துப் பேசியுள்ள அந்தப் பெண், “ எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. சித்தராமையா நல்ல முதல்வர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பஞ்சாயத்து உறுப்பினர்களிடம் யாதின்ரா வரும்போது தெரிவிக்குமாறு கூறியிருந்தேன். ஆனால் அவர்கள் எனக்கு இதுகுறித்து தெரிவிப்பதில்லை. இதைத்தான் நான் அவரிடம் பேசினேன். ஆனால், ஒரு முன்னாள் முதல்வரிடம் நான் இவ்வாறு பேசியிருக்கக் கூடாது. அதனால்தான் அவர் கோபப்பட்டார்” என்று தெரிவித்துள்ளார்.

 

கர்நாடகா

 

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள சித்தராமையா, ``இது எதிர்பாராமல் நடந்த சம்பவம். கட்சி தொடர்பான கூட்டத்தில் அவர் நீண்ட நேரம் பேசுவதற்கான நேரத்தை எடுத்துக்கொண்டார். அதைத் தடுக்க முற்பட்டேன். அவரை எனக்கு 15 வருடங்களாகத் தெரியும். என்னுடைய சகோதரியைப் போன்றவர்’’ எனப் பதிவிட்டுள்ளார்.