ஜியோ வாடிக்கையாளரா நீங்கள்?- வந்துவிட்டது  `ஜியோ ரயில்’ செயலி!  | Jio launched new app for booking train tickets

வெளியிடப்பட்ட நேரம்: 12:45 (29/01/2019)

கடைசி தொடர்பு:12:45 (29/01/2019)

ஜியோ வாடிக்கையாளரா நீங்கள்?- வந்துவிட்டது  `ஜியோ ரயில்’ செயலி! 

ஜியோ நிறுவனம், தனது வாடிக்கையாளர்களுக்கு ரயில் டிக்கெட் முன்பதிவுசெய்ய ஜியோ ரயில் என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. 

ஜியோ ரயில்

ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ அறிமுகமானது முதல் பல்வேறு சலுகைகளை அறிவித்துவருகிறது. ஜியோ ஸ்டோர் மூலம் பல்வேறு சேவைகளை வழங்கிவரும் அந்நிறுவனத்தின் புதிய சேவை அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, இனி ஜியோ பயனாளிகள் தங்களின் ஜியோ போன் மூலமாகவே ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். 

இதற்கான `ஜியோ ரயில்' (Jio Rail) என்னும் செயலியை அறிமுகம்செய்துள்ளது அந்த நிறுவனம். இது, ரயில்வே துறையின் ஐ.ஆர்.சி.டி.சி மூலம் இயங்கும். இந்தச் செயலி மூலமாக ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு மற்றும் முன்பதிவுசெய்த டிக்கெட்டுகளை ரத்துசெய்யவும் முடியும். இந்தச் செயலியில் டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலமாகவும் இ-வேலட் முறையிலும் பணம் கட்டலாம். 

ரயில் முன்பதிவு

அதேபோன்று, பி.என்.ஆர் ஸ்டேட்டஸும், ரயில்குறித்த தகவல்களையும் பெற முடியும். இந்த ரயில் செயலி தொடர்பாகக் கருத்து தெரிவித்துள்ள ஜியோ நிறுவனம்,  ``இது, ரயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி  மூலம் இயங்குகிறது. வரும் காலத்தில், ரயிலில் பயணம் செய்யும்போதே உணவு ஆர்டர் செய்வதுபோன்ற பல்வேறு திட்டங்களை இந்தச் செயலிமூலம் அறிமுகம் செய்ய உள்ளோம்”  என்றது. இந்தச் செய்தி, ஜியோ வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.