சிறையிலிருந்து கொண்டே தேர்தலில் வெற்றிபெற்ற ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ்! #VikatanInfographics #RIPGeorgeFernandes | All you need to know about ex minister George Fernandes

வெளியிடப்பட்ட நேரம்: 18:47 (29/01/2019)

கடைசி தொடர்பு:18:47 (29/01/2019)

சிறையிலிருந்து கொண்டே தேர்தலில் வெற்றிபெற்ற ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ்! #VikatanInfographics #RIPGeorgeFernandes

மக்களின் அடிப்படைத் தேவைகளை, அவர்களின் பிரச்னைகளைப் புரிந்துகொண்டு மக்களில் ஒருவராகக் கிளர்ந்தெழுந்தார். அதனால்தான் கடைசிவரை மக்களின் பக்கம் நின்றார் அவர்.

சிறையிலிருந்து கொண்டே தேர்தலில் வெற்றிபெற்ற ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ்! #VikatanInfographics #RIPGeorgeFernandes

``மக்களின் உரிமைகளைக் காப்பாற்ற எதைச் செய்தாலும் ஜனநாயகபூர்வமானதுதான்" அவசர நிலையை எதிர்த்ததற்காக ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் கைது செய்யப்பட்டு அழைத்துச் சென்றபோது கூறிய வரிகள் இவை. மிசா காலத்தில் 21 மாதங்கள் சிறையில் இருந்த ஃபெர்னாண்டஸ், சிறைவாசத்தை அனுபவித்துக்கொண்டே, அங்கிருந்தே 1977-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றார். இந்தச் செய்தியை அறியும்போது ஜார்ஜ், எவ்வளவு துணிச்சல் மிக்கவராகவும் மக்கள் செல்வாக்குக் கொண்ட தலைவராகவும் இருந்திருக்கிறார் என்பதை அறிய முடிகிறது.

டெல்லியில் தன் வீட்டில் உடல் நலம் குன்றிய நிலையில் 88-வது வயதில் இயற்கை எய்தினார் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ். அவருடைய வாழ்க்கைப் பயணம் பற்றிய சில தகவல்கள் இதோ... 

ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ்

ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், தேர்தலில் வெற்றியை நோக்கிச் செயல்படும் வெறும் அரசியல்வாதியாக மட்டும் ஒருபோதும் இருந்ததில்லை. பத்திரிகையாளர், எழுத்தாளர், தொழிற்சங்கவாதி எனப் பல்வேறு பரிமாணங்களை கொண்டவராகத் திகழ்ந்தார். மக்களின் அடிப்படைத் தேவைகளை, அவர்களின் பிரச்னைகளைப் புரிந்துகொண்டு மக்களில் ஒருவராகக் கிளர்ந்தெழுந்தார். அதனால்தான் கடைசிவரை மக்களின் பக்கம் நின்றார் அவர். அவர் மறைந்தாலும், அவர் ஆற்றிய சேவைகளும், பணிகளும் காலத்திற்கும் நிற்கும். ஃபெர்னாண்டஸும் நிற்பார்...!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்