''ரூ.10 கோடி டெபாசிட் கட்டிவிட்டு வெளிநாடு போகலாம்!''- கார்த்திக்கு நீதிமன்றம் உத்தரவு | supreme court directed Karti to deposit Rs 10 crore for abroad travel

வெளியிடப்பட்ட நேரம்: 13:50 (30/01/2019)

கடைசி தொடர்பு:13:50 (30/01/2019)

''ரூ.10 கோடி டெபாசிட் கட்டிவிட்டு வெளிநாடு போகலாம்!''- கார்த்திக்கு நீதிமன்றம் உத்தரவு

ர்டெல்- மேக்ஸிஸ் வழக்கில் சிக்கியுள்ள கார்த்தி சிதம்பரம், 'ரூ.10 கோடி டெபாசிட் கட்டிவிட்டு வெளிநாடு செல்லலாம்' என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கார்த்தி சிதம்பரம்

இந்த  வழக்கில், அமலாக்கத்துறை கார்த்தி சிதம்பரத்திடம் விசாரணை நடத்திவருகிறது. இந்நிலையில், பிப்ரவரி மாதத்தில் 10-ம் தேதி முதல் 26- ம் தேதி வரையும்,  மார்ச் 23-ம் தேதி முதல் 31-ம் தேதி வரையும் வெளிநாடு செல்ல கார்த்தி சிதம்பரம் உச்ச நீதிமன்றத்திடம் அனுமதி கேட்டு  மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் முன் விசாரணைக்கு வந்தது.

முடிவில்,  'ரூ.10 கோடி டெபாசிட் கட்டிவிட்டு வெளிநாடு செல்லாம்' என்று நீதிபதி ரஞ்சன் கோகய் உத்தரவிட்டார். மேலும், மார்ச் மாதத்தில் 5,6,7,12 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள விசாரணையி,ல் கார்த்தி சிதம்பரம் அமலாக்கத்துறை முன் ஆஜராக வேண்டும். வழக்குக்கு முழுமையாக ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். சட்டத்துடன் விளையாடக் கூடாது.  ஒத்துழைப்பு அளிக்காதபட்சத்தில், நாங்கள் வேறு வகையான உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டியது வரும்'  என்றும் ரஞ்சன் கோகய் கண்டிப்பு காட்டியுள்ளார். 

கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில், கார்த்தி சிதம்பரம் பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள ஒரு வார காலம் உச்ச நீதிமன்றம் அனுமதியளித்தது. மீண்டும், கடந்த நவம்பர் மாதத்தில் வெளிநாடு செல்ல அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அனுமதி மறுக்கப்பட்டது. இந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி, வெளிநாடு செல்ல மீண்டும் அனுமதி கோரினார். அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டினார். உச்ச நீதிமன்றம், 'எங்களுக்கு வேறு வேலை இருக்கிறது' என்று கூறி, கார்த்தி சிதம்பரத்தின் மனுவைத் தள்ளுபடிசெய்துவிட்டது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க