``எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்!” - இந்தியர்களிடம் பதிலை எதிர்பார்க்கும் கூகுள் | Google India wanted to know why so many of its users kept asking to marry Google Assistant

வெளியிடப்பட்ட நேரம்: 13:54 (30/01/2019)

கடைசி தொடர்பு:13:54 (30/01/2019)

``எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்!” - இந்தியர்களிடம் பதிலை எதிர்பார்க்கும் கூகுள்

உலகத்தையே தன்னுள் அடக்கிவைத்திருக்கும் கூகுளின் மற்றுமொரு சிறந்த மேம்பாடுதான், கூகுள் அசிஸ்டென்ட்.  நமக்கு ஒரு விஷயத்தைப் பற்றி தெரிய வேண்டும் என்றால், கூகுளில் சர்ச் செய்து அனைத்து விஷயங்களையும் தேடி தெரிந்துகொள்வோம். ஆனால், அதே விஷயத்தை கூகுள் அசிஸ்டென்டிடம் கேட்டால், அதுவே பல தரவுகளையும் ஆராய்ந்து, நமக்குத் தேவையான பதில் அளிக்கும். கூகுள்  அசிஸ்டென்ட் சாதாரண மனிதர்களைப் போலவே  இயல்பாகப் பேசி, புரிந்துகொண்டு, நம் கேள்விகளுக்குப் பதிலளிக்கக்கூடியது. பல மொழிகளில் இந்த சேவை தொடர்ந்துகொண்டிருக்கிறது. பல லட்சக்கணக்கான கேள்விகளுக்குத் தன்னுள் பதில் வைத்துள்ளது இந்த அசிஸ்டென்ட்.

கூகுள்

அப்படிப்பட்ட கூகுளிடம், நம் இந்தியர்கள் கேட்ட ஒரு கேள்விக்கு மட்டும் பதிலே கிடைக்கவில்லை. இதனால் கடுப்பான அந்த நிறுவனம்,  “எங்களுக்கு உண்மையில் ஒன்று மட்டும் தெரிய வேண்டும். ஏன் இந்தியர்கள் அனைவரும்  ‘என்னைத் திருமணம் செய்துகொள்கிறாயா கூகுள்?’ எனக் கேட்கின்றனர்” என தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர். 

இதற்கும் தங்கள் பாணியில் மிகவும் அசத்தலான பதில் அளித்து, மீண்டும் கூகுளை அலரவிட்டுவருகின்றனர், நம் நெட்டிசன்கள்.  அவர்கள் அளித்த பதில்கள்,  ‘ ஏனெனில் எங்களுக்கு காதலி இல்லை’  ‘ எங்களுக்கு ஒன்று மட்டும் தெரிய வேண்டும். கூகுள் ஏன் எப்போதும் எங்கள் லொக்கேஷனைக் கேட்கிறது’  ‘நாங்கள் 90’s கிட்ஸ் இப்படிதான் கேட்போம்’ ‘ஏனென்றால், நீங்கள் மிகவும் அழகாக உள்ளீர்கள்’ போன்ற பல கிண்டலான பதில்களால் கமென்ட் பாக்ஸை நிரப்பிவருகின்றனர்.