`சனிக்கிழமை ஸ்டாலின் பிரதமர்; ஞாயிறுக்கிழமை? - மெகா கூட்டணியைக் கலாய்த்த அமித் ஷா | Grand alliance, if voted to power, will see different PM everyday says Amit Shah

வெளியிடப்பட்ட நேரம்: 18:35 (30/01/2019)

கடைசி தொடர்பு:18:46 (30/01/2019)

`சனிக்கிழமை ஸ்டாலின் பிரதமர்; ஞாயிறுக்கிழமை? - மெகா கூட்டணியைக் கலாய்த்த அமித் ஷா

மெகா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஒரு நாளுக்கு ஒரு பிரதமர் வருவார் எனப் பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷா பேசியுள்ளார்.  

கடந்த சில தினங்களுக்கு முன்பு பன்றிக் காய்ச்சல் தொற்றுகாரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமித் ஷா பூரண நலம் பெற்று வீடு திரும்பினார். தற்போது கட்சிப் பணிகளில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். அதன்படி, இன்று உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார். அப்போது, ``10 சதவிகித இடஒதுக்கீடு நாட்டுக்கு நிச்சயம் பலன் அளிக்கக்கூடியவையாக இருக்கும். ராமர் பிறந்த இடத்தில் நிச்சயம் ராமர் கோயில் கட்டப்படும். அதுதான் பா.ஜ.க-வின் லட்சியம். ராமஜென்ம பூமியைப் பற்றிப் பேச காங்கிரஸ் கட்சிக்கு எந்த அதிகாரமும் இல்லை. ராமர் கோயில் விவகார வழக்கு வரும்போதெல்லாம் காங்கிரஸ் கட்சியினர் தடையாக உள்ளனர். பா.ஜ.க மீதான பயத்தால்தான் எதிர்க்கட்சியினர் மெகா கூட்டணி அமைத்துள்ளனர். மெகா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஒரு நாளுக்கு ஒருவர் பிரதமராக இருப்பார். 

அமித் ஷா

அவர்கள் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தால் திங்கள்கிழமை மாயாவதியும் செவ்வாய்க்கிழமை அகிலேஷும் புதன்கிழமை மம்தா பானர்ஜியும் வியாழக்கிழமை சரத்பவாரும் வெள்ளிக்கிழமை தேவகவுடாவும் சனிக்கிழமை ஸ்டாலினும் பிரதமராக இருப்பார்கள். ஞாயிற்றுக்கிழமை நாட்டுக்கே விடுமுறை விட்டுவிடுவார்கள். சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் இரண்டு கட்சிகளும் சாதி அரசியல் செய்து வருகின்றன. அவர்கள் இருவரும் அமைத்துள்ள கூட்டணி ஊழல் கூட்டணி" என்று கடுமையாகச் சாடினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க