காந்தியை அவமதித்த பூஜா பாண்டே தலைமறைவா? | including pooja Pandey 9 booked for shooting Mahatma effigy

வெளியிடப்பட்ட நேரம்: 11:45 (31/01/2019)

கடைசி தொடர்பு:11:45 (31/01/2019)

காந்தியை அவமதித்த பூஜா பாண்டே தலைமறைவா?

காத்மா காந்தி நினைவு தினத்தில், அவரின் உருவப்படத்தை துப்பாக்கியால் சுடுவது போன்ற காணொளியை வெளியிட்ட அகில பாரத இந்து சபா தேசியச் செயலாளர் பூஜா ஷாகுன் பாண்டே உள்ளிட்ட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பூஜா பாண்டே எங்கே இருக்கிறார் என்றும் தெரியவில்லை. 

காந்தியை அவமதித்த சம்பவம்

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் உள்ள காந்தி பார்க் பகுதியில், இந்து மகா சபா அலுவலகத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சேவின் உருவப்படத்துக்கும் பூஜா பாண்டே மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்தக் காணொளி, நேற்று இணையத்தில் வெகு வேகமாகப் பரவியது. தொடர்ந்து, நாட்டின் பல முனைகளில் இருந்து கண்டனங்கள் குவிந்தது. காணொளி வெளியானதையடுத்து, இந்து மகா சபா அலுவலகத்துக்குள் நுழைந்த போலீஸார், அங்கிருந்த இரு தொண்டர்களைக் கைது செய்தனர். மற்றவர்கள் தலைமறைவாக உள்ளனர்.

பூஜா பாண்டே உள்ளிட்ட 9 பேர்மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. போலீஸ் அதிகாரி நீரஜ் குமார் கூறுகையில், ''அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் இவர்கள்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரயாக்ராஜ் கும்பமேளாவில் பங்கேற்க வந்த பூஜா பாண்டே, காந்தியை அவமதிக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுவிட்டு, மீண்டும் டெல்லி சென்றதாகச் சொல்லப்படுகிறது. 

மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் ஷிவ்ராஜ் சிங்குடன் பூஜா

அகில பாரத  மகா இந்து சபா செய்தித் தொடர்பாளர் அசோக் பாண்டே கூறுகையில், '' நாட்டின் பிரிவினைக்கு காந்திதான் காரணம். நாடு பிரிந்தபோது 10 லட்சம் இந்துக்கள் கொல்லப்பட்டனர். ராவண வதம் நடத்தப்படும் ஒரு நாட்டில், இதுபோன்ற காரியங்களில் ஈடுபடுவதில் தவறில்லை. எங்கள் அலுவலகத்துக்குள் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பொது இடத்தில் நடக்கவில்லை'' என்று கூறியுள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க