`நாடாளுமன்றக் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த ஒத்துழையுங்கள்!’ - மோடி வேண்டுகோள் | Parliamentarians ensure the smooth conduct of LS and RS - PM

வெளியிடப்பட்ட நேரம்: 16:50 (31/01/2019)

கடைசி தொடர்பு:16:50 (31/01/2019)

`நாடாளுமன்றக் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த ஒத்துழையுங்கள்!’ - மோடி வேண்டுகோள்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், சுமுகமாக நடைபெறுவதை எம்.பி-க்கள் அனைவரும் உறுதிசெய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டிருக்கிறார்.

பிரதமர் மோடி - நாடாளுமன்றக் கூட்டத்தொடர்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. குடியரசுத் தலைவர் உரை நிகழ்த்தி முடிந்த பின்னர், நாடாளுமன்ற வளாகத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பிரதமர் பேசுகையில் இந்த வேண்டுகோளை விடுத்தார்.

மேலும், `` `அனைத்து மக்களுக்கும் எல்லா வளர்ச்சியும் கிடைக்க வேண்டும்’ என்ற கொள்கையை நோக்கி பி.ஜே.பி தலைமையிலான அரசு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. எந்தவொரு பிரச்னை குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசு தயாராக இருக்கிறது. எனவே, நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரை, மக்கள் பிரச்னைகள் குறித்து விவாதிக்க உறுப்பினர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நாடாளுமன்ற அவைகளின் நடவடிக்கைகளை மக்கள், உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள்’’ என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க