மோடியை அடுத்து ராகுல்! - தலைவர்கள் வருகையால் களைகட்டும் தமிழகத் தேர்தல் களம் | Rahul Gandhi will be visit TN in February to start election campaign

வெளியிடப்பட்ட நேரம்: 18:38 (31/01/2019)

கடைசி தொடர்பு:18:47 (31/01/2019)

மோடியை அடுத்து ராகுல்! - தலைவர்கள் வருகையால் களைகட்டும் தமிழகத் தேர்தல் களம்

கில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் செய்ய, பிப்ரவரியில் வரவிருக்கிறார். இதற்கான திட்டங்களைத் தமிழக காங்கிரஸ் கமிட்டியினர் இப்போதே செய்யத் தொடங்கிவிட்டனர்.

ராகுல்

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுவதற்காகப் பிரதமர் மோடி, தமிழகம் வந்தார். அதையடுத்து, மதுரையில் பா.ஜ.க ஏற்பாடு செய்திருந்த பிரமாண்டக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில், மோடி தீவிரமாகப் பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறார். பிப்ரவரி மாத இறுதியிலும் தமிழகத்தில் பிரசாரம் செய்யும் திட்டத்தை வைத்திருக்கிறார் மோடி.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, பிப்ரவரி மாதம் இரண்டாவது வாரம் பிரசாரத்துக்காகத் தமிழகம் வருகிறார். அவர் கலந்துகொள்ள வேண்டிய பொதுக்கூட்டங்கள், தொகுதிகள் என அதற்கான வேலைகளை இப்போதே செய்யத் தொடங்கிவிட்டனர் தமிழக காங்கிரஸ் கமிட்டியினர். ஏற்கெனவே வடமாநிலங்களில் தன்னுடையப் பிரசாரத்தைத் தொடங்கிவிட்ட நிலையில், ராகுலின் தமிழகப் பயணம் தற்போது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. ராகுல் வருகையின்போது, தமிழகத்தில் கூட்டணிக்குள் தொகுதிப் பங்கீடு மற்றும் வேட்பாளர் பட்டியலும் இறுதி செய்யப்படும் என்கிறார்கள்.