2 ஹெக்டேருக்குக் குறைவாக நிலமிருந்தால் ஆண்டுக்கு ரூ.6,000! #Budget2019 | Central govt to provide 6000 per annum to farmers with less than 2 hectares of land

வெளியிடப்பட்ட நேரம்: 14:40 (01/02/2019)

கடைசி தொடர்பு:14:40 (01/02/2019)

2 ஹெக்டேருக்குக் குறைவாக நிலமிருந்தால் ஆண்டுக்கு ரூ.6,000! #Budget2019

மத்திய அரசின் இடைக்கால நிதிநிலையை இன்று நாடாளுமன்றத்தில் (31.01.2019) நிதி அமைச்சர் பியூஸ் கோயல் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பல அறிவிப்புகளை வெளியிட்டு ஆச்சர்யப்படுத்தியுள்ளார். இதில், ``இரண்டு ஹெக்டேருக்குக் குறைவாக நிலமுள்ள விவசாயிக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் வழங்கப்படும்" என்று அறிவித்துள்ளார். 

பட்ஜெட்


மத்திய நிதி அமைச்சர் பியூஸ் கோயல் இன்று இடைக்கால பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதில், ``தனிநபர் வருமான வரி உச்சவரம்பு 2.5 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்தப்படும். பிரதான் மந்திரி கிஷன் சம்மன் நிதி திட்டத்தில் கீழ் விவசாயிகளுக்கு இரண்டு ஹெக்டேர் அல்லது அதற்குக் குறைவான நிலமிருந்தால் ஆண்டுக்கு 6,000 ரூபாய் வழங்கப்படும். இந்தத் தொகை நேரடியாக விவசாயியின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இதை மூன்று முறையாக (ரூ.2000) என்று பிரித்து வழங்கப்படும். இந்தத் தொகையினால் குறைந்தது 12 கோடி விவசாயிகள் நேரடியாகப் பயன்பெறுவார்கள்" என்று அறிவித்துள்ளார். 

``இதை டிசம்பர் 2018 யிலேயே அமல்படுத்தப்படும். பயனாளிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டும் வருகிறது. விரைவில் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படும். இதற்காக 75,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்துக்கு 60,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்" என அறிவித்துள்ளார் நிதி அமைச்சர் பியூஷ் கோயல்.