புதிய விதிமுறைகள் எதிரொலி... அமேசான் தளத்திலிருந்து நீக்கப்பட்ட பொருள்கள் எவை? | Which products have been removed from amazon due to new rules?

வெளியிடப்பட்ட நேரம்: 21:40 (01/02/2019)

கடைசி தொடர்பு:21:41 (01/02/2019)

புதிய விதிமுறைகள் எதிரொலி... அமேசான் தளத்திலிருந்து நீக்கப்பட்ட பொருள்கள் எவை?

புதிய foreign direct investment (FDI) (அந்நிய முதலீடு) விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதால் அமேசான் இந்தியா தளத்திலிருந்து பல பொருள்கள் இன்று நீக்கப்பட்டுள்ளன. புதிய விதிமுறைகளில் முக்கியமானதாக இருப்பது பங்குகள் வைத்திருக்கும் நிறுவனங்களின் பொருள்களை விற்கக் கூடாது என்பதுதான். இதற்குக் கட்டுப்பட்டு பேட்டரிகள் தொடங்கி வயர்கள் வரை அமேசான் பேசிக்ஸ் என்ற பிராண்ட்டில் விற்றுவந்த அனைத்தையும் தனது தளத்திலிருந்து நீக்கியுள்ளது அமேசான். இந்தப் பொருள்கள் தேடும்போது பட்டியலிடப்பட்டாலும் வாங்க எந்த வசதியும் கொடுக்கப்படவில்லை. இப்போது இவற்றுக்கு 'Buy now' பட்டனுக்குப் பதிலாக 'Email me' என்ற பட்டன்தான் இருக்கிறது. 

புதிய விதிமுறைகள்

இது போக Shopper's Stop என்னும் ஃபேஷன் ஸ்டோரில் 5 சதவிகிதம் பங்குகள் வைத்திருப்பதால் அதன் பொருள்களும் அமேசானில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. அமேசானுக்குச் சொந்தமான கிண்டில், எக்கோ போன்ற பொருள்களிலும் பல மறைந்துள்ளன. எக்கோ சாதனங்களில் சில விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தாலும் Firestick tv போன்ற முக்கிய பொருள்கள் விற்பனையில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன. மற்றவையும் விரைவில் நீக்கப்படவுள்ளனவாம்.

அமேசான்

மேலும் Cloudtail என்னும் முக்கிய விற்பனையாளரின் (vendor) பங்குகளை அமேசான் வைத்திருப்பதால், அந்த நிறுவனம் விற்கும் எந்தப் பொருளையும் இனி அமேசானில் விற்க முடியாது. இப்படி மொத்தமாக சுமார் 4 லட்சம் பொருள்கள் அமேசான் தளத்திலிருந்து நீக்கப்படவுள்ளது. இது அமேசானின் மொத்த வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கு என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் கடந்த காலாண்டில் பெரும் வெற்றி கண்ட அமேசான் இந்த வருடத்தின் முதல் காலாண்டு விற்பனை பெருமளவில் சறுக்கும் என வல்லுநர் கணிக்கின்றனர். ஃப்ளிப்கார்ட்டில் எந்த மாதிரியான தாக்கம் இருக்கும் என்பது இதுவரை தெரியவில்லை, பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க