விளையாட்டு, நடனம், மேளதாளம் - இது பெண் அரசியல் தலைவர்களின் ஜாலி மொமன்ட் | political leaders playing dhols and enjoying at Badals’ annual lunch

வெளியிடப்பட்ட நேரம்: 12:30 (02/02/2019)

கடைசி தொடர்பு:12:58 (02/02/2019)

விளையாட்டு, நடனம், மேளதாளம் - இது பெண் அரசியல் தலைவர்களின் ஜாலி மொமன்ட்

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், 2019-20 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட் நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ளதால் மத்திய அரசின் பட்ஜெட் இடைக்கால பட்ஜெட்டாகத் தாக்கல் செய்யப்பட்டது. இந்தப் பட்ஜெட் கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

ஸ்மிருதி இராணி

PC : Twitter/@gaikwadpramod11

பட்ஜெட், நாடாளுமன்றத் தேர்தல், கூட்டணி போன்ற விஷயங்கள், பரபரப்பாக ஒரு புறம் நடந்தாலும் அதற்கு அப்படியே எதிராக அரசியல் தலைவர்கள் சேர்ந்து விளையாடிய சம்பவமும் நிகழ்ந்துள்ளது. ஒவ்வோர் ஆண்டும், மத்திய உணவு அமைச்சர் ஹர்சிம்ரட் கௌர் பாடலும் முன்னாள் பஞ்சாப் துணை முதல்வர் சுக்பிர் சிங் பாடலும் இணைந்து அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் அழைத்து தங்கள் வீட்டில் விருந்துவைப்பர்.

விருந்து நிகழ்ச்சி

PC : Twitter/@gaikwadpramod11

இந்த ஆண்டுக்கான விருந்து நிகழ்ச்சி டெல்லியில் உள்ள ஹர்சிம்ரட் கௌர் பாடல் (harsimrat kaur badal) வீட்டில் நேற்று நடைபெற்றுள்ளது. நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்த பிறகு, அனைத்து தலைவர்களும் இந்த மதிய விருந்தில் கலந்துகொண்டுள்ளனர்.

பெண் எம்.பிக்கள்

 PC : The print 

இந்த நிகழ்ச்சியில் பெண் தலைவர்களான கனிமொழி, ஸ்மிருதி இராணி, ஹர்சிம்ரட் கௌர் படேல், சுப்ரியா சுலே, அனுப்ரியா படேல் ஆகியோர் இணைந்து மேள தாளங்களுடன் விளையாடியும் நடனமாடியும் மகிழ்ந்துள்ளனர். உள்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங் மேளமடித்து கொண்டாடி மகிழ்ந்தார். இந்த விருந்து நிகழ்ச்சியில் அனைத்து முக்கிய தலைவர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

அரசியல் பரபரப்புகளுக்கு இடையே இவர்களின் கொண்டாட்ட நிகழ்ச்சி தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது. இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளது.