கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் கமாடிட்டி | Commodity Trading

வெளியிடப்பட்ட நேரம்: 21:43 (02/02/2019)

கடைசி தொடர்பு:21:43 (02/02/2019)

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் கமாடிட்டி

“தங்கம் மினியில் பிப்ரவரி கான்ட்ராக்ட், டெலிவரி பீரியடுக்குள் நுழைவதால், இனி நாம் மார்ச் கான்ட்ராக்ட்டை எடுத்துக்கொள்வோம். தங்கத்தின் பக்கவாட்டு நகர்வின் மேல்எல்லையான 32200 என்பது தடை நிலையாகவும், கீழே 31950 என்பது ஆதரவாகவும் உள்ளது.”

தங்கம் (மினி)
சென்ற வாரம், தங்கம், வலிமையான அடுத்த கட்ட நகர்வுக்குத் தயாராகிறதா, பங்குச் சந்தையின் இறக்கம் தங்கத்திற்குச் சாதகமாக இருக்குமோ எனப் பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம்.

தங்கம்

உலகப் பொருளாதார வளர்ச்சி, முன்பு கணித்ததைவிட இன்னும் குறைவாகத்தான் வளரும். இது, தங்கத்திற்குச் சாதகமாக இருக்கலாம்.
சீனாவின் பொருளாதாரம், கடந்த 20 வருடங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது என்பதும்கூட தங்கத்திற்குச் சாதகமாக இருக்கலாம்.
சென்ற வாரம், நாம் முன்வைத்த அத்தனை கேள்விகளும், நிஜம் என்பதுபோல் தற்போது தங்கம் நகர ஆரம்பித்துள்ளது. எல்லா மேக்ரோ காரணிகளும் தங்கத்தின்  விலை ஏற்றத்திற்குச் சாதகமாக இருக்க, தங்கம் வலிமைகொண்டு ஏற ஆரம்பித்துள்ளது.  தங்கம் படிப்படியாக முந்தைய உச்சங்களைத் தாண்டி போய்க்கொண்டிருக்கிறது. 2016-ம் ஆண்டின் உச்சமான 32567-ஐ ஜனவரி 2019 கடைசியில் உடைத்து ஏற ஆரம்பித்துள்ளது.
2019 பிப்ரவரி  தொடங்கியவுடன், 2013-ல் அதிகபட்சமாக முடிந்த விலையான 33002-யும் உடைத்து ஏற ஆரம்பித்துள்ளது.  தங்கத்திற்கு ஒரு நல்லகாலம்தான் பிறந்துள்ளது. டிரேடர்கள், தொடர்ந்து இதைப் பின்பற்றி பணம் பண்ணும் வாய்ப்பு தொடர்ந்து வந்துகொண்டுதான் இருக்கிறது.
சென்ற வாரம் சொன்னது… 

தி.ரா.அருள்ராஜன்“தங்கம் மினியில் பிப்ரவரி கான்ட்ராக்ட், டெலிவரி பீரியடுக்குள் நுழைவதால், இனி நாம் மார்ச் கான்ட்ராக்ட்டை எடுத்துக்கொள்வோம். தங்கத்தின் பக்கவாட்டு நகர்வின் மேல்எல்லையான 32200 என்பது தடை நிலையாகவும், கீழே 31950 என்பது ஆதரவாகவும் உள்ளது.”

சென்ற வார தடைநிலையான 32200-ஐ உடைத்து, தங்கம் பலமாக ஏற ஆரம்பித்துள்ளது. சென்ற வாரம் திங்கள் முதல் வெள்ளி வரை ஒவ்வொரு நாளும், புதிய உச்சங்களைத் தோற்றுவித்துக்கொண்டு, தங்கம் ஏற ஆரம்பித்துள்ளது. 

சென்ற வாரம் திங்களன்று 32503-ல் முடிந்தபின், அடுத்தடுத்த நாள்களில் 32851, 32975 என வலிமையாக ஏறிக்கொண்டு இருந்த தங்கம், வெள்ளியன்று மிக மிக வலிமையாக ஏற ஆரம்பித்துள்ளது. வெள்ளியன்று மாலை 33286 என்ற எல்லையையும் தொட்டது.

பட்ஜெட்டுக்குப்பின் பங்குச் சந்தை இறங்க, தங்கம் ஏற ஆரம்பித்துள்ளது. இது, பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கும் ஒரு எச்சரிக்கையாக இருக்கலாம். இனி என்ன நடக்கலாம்? தங்கம் வலிமையாக ஏறிக்கொண்டிருக்கும். இந்த நிலையில், 33030 என்பது உடனடி ஆதரவாகவும், மேலே 33350 என்பது உடனடித் தடைநிலையாகவும் உள்ளது.
 

வெள்ளி (மினி)
வெள்ளி, தங்கத்தின் திசையில் நகர்ந்திருந்தாலும், அதன் வீரியம் குறைவாகவே இருந்துள்ளது. எனவே, தங்கம் ஏறத் தயங்கும்போது, வெள்ளி இறக்கம் கணிசமானதாக இருக்கலாம்.
சென்ற வாரம் சொன்னது… “வெள்ளி பக்கவாட்டில் இருந்துவருவதால், தற்போதைய ஆதரவு எல்லை 38600 ஆகும். மேலே 39460-ஐ தடைநிலையாகக் கொண்டுள்ளது.”
வெள்ளி, கடந்த வாரம் முழுவதும் நாம் கொடுத்திருந்த தடைநிலையான 39460-ஐ தாண்டி ஏற ஆரம்பித்து, ஒவ்வொரு நாளும் படிப்படியாக ஏறி, சிறிய சிறிய புது உச்சங்களைத் தோற்றுவித்துள்ளது. ஆனாலும், 40690-ஐ தொட்டபிறகு, உச்சத்தில் சற்றே தடுமாற்றத்துடனே காணப்படுகிறது.  
இனி என்ன செய்யலாம்?  வெள்ளி, தற்போது 39780 என்ற எல்லையை முக்கிய ஆதரவாகக் கொண்டுள்ளது. மேலே 40690-ஐ உடைத்தால், கணிசமான ஏற்றம் வரலாம்.

கச்சா எண்னெய்

கச்சா எண்ணெய் (மினி)
சென்ற வாரம் சொன்னது… “கச்சா எண்ணெய்க்கு நாம் முன்பு கொடுத்திருந்த ஆதரவு எல்லையான 3700, இன்னமும் வலிமையான ஆதரவே ஆகும். மேலே 3900 என்பது, வலிமையான தடைநிலை ஆகும்.” 
கச்சா எண்ணெய், தற்போது ஒரு பக்கவாட்டு நகர்விலிருந்து வருகிறது. மேலே நாம் கொடுத்திருந்த தடைநிலையான 3900-ஐ தாண்டி ஏற முயற்சிக்கும்போதெல்லாம், முடியாமல் இறங்கிவருகிறது. அதேபோல், கீழே 3700 என்ற எல்லை ஏறக்குறைய காப்பாற்றப்பட்டு வருகிறது.
இனி என்ன செய்யலாம்? கச்சா எண்ணெய் தற்போது 3955-ஐ தடைநிலையாகக் கொண்டுள்ளது. கீழே 3730 என்பதை உடனடி ஆதரவாகவும் கொண்டுள்ளது.