அதிகாலையில் தடம் புரண்ட சீமான்சல் எக்ஸ்பிரஸ்; மீட்புப் பணிகள் தீவிரம் -6 பேர் பலி! | Seemanchal Express derailed in early morning

வெளியிடப்பட்ட நேரம்: 08:02 (03/02/2019)

கடைசி தொடர்பு:08:02 (03/02/2019)

அதிகாலையில் தடம் புரண்ட சீமான்சல் எக்ஸ்பிரஸ்; மீட்புப் பணிகள் தீவிரம் -6 பேர் பலி!

பீகார் மாநிலத்தில் இன்று அதிகாலை சீமான்சல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. 

ரயில் விபத்து

பீகார் மாநிலத்தின் ஜோக்பானி - டெல்லியின் ஆனந்த் விகார் இடையே பணிக்கும் சீமான்சல் எக்ஸ்பிரஸ் ரயில், பீகாரின் சஹாதை புசூர்க் என்னும் இடத்தில் செல்லும் போது தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்து அதிகாலை 3.58 மணிக்கு நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தடம் புரண்ட ரயில்

மொத்தம் 9 பெட்டிகள் தடம் புரண்டதில், பலருக்குப் பலத்த காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்த பாதுகாப்பு மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளைக் கவனித்தனர்.  காயமடைந்தவர்கள் உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த விபத்தில் 6 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படையும் சம்பவ இடத்தில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. 

 சீமான்சல் எக்ஸ்பிரஸ்

மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெறவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக உயர் சிகிச்சை வழங்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார். ரயிலில் பயணம் செய்தவர்கள் தொடர்பான தகவல்களுக்கு அவசர தொலைப்பேசி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ரயில் விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.