சாரதா சிட்பண்ட் நிதிமுறைகேடு -மாயமான கொல்கத்தா போலீஸ் கமிஷனர்! | Kolkata city police commissioner Rajeev Kumar ‘goes missing’

வெளியிடப்பட்ட நேரம்: 13:35 (03/02/2019)

கடைசி தொடர்பு:13:35 (03/02/2019)

சாரதா சிட்பண்ட் நிதிமுறைகேடு -மாயமான கொல்கத்தா போலீஸ் கமிஷனர்!

போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமார் மாயமானதால் கொல்கத்தா நகர போலீஸார் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 

கமிஷனர் ராஜீவ்குமார்

கொல்கத்தா மாநகர கமிஷனராக இருப்பவர் ராஜீவ் குமார். மம்தா பனார்ஜிக்கு மிக நெருக்கமானவர். 1989- ம் ஆண்டு பேட்ஜை சேர்ந்த இவர் மீது சாரதா சிட்பண்ட் நிதி முறைகேடு  வழக்கில் புகார் எழுந்தது. தொடர்ந்து சி.பி.ஐ அவருக்குச் சம்மன் அனுப்பியது. விசாரணைக்கு ஆஜராவதை ராஜீவ் குமார் தவிர்த்து வந்தார். 'விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றால் கைது நடவடிக்கை பாயும்' என சி.பி.ஐ எச்சரித்தது. இதைத் தொடர்ந்து அவர் தலைமறைவாகி விட்டார். 

கடைசியாகக் கடந்த வியாழக்கிழமை கொல்கத்தா மாநகர போலீஸ் சார்பில் நடந்த  புத்தக கண்காட்சி திறப்பு விழாவில் கலந்து கொண்டார். இந்த விழாவில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் பங்கேற்றார். அதற்குப் பிறகு நடந்த துறைரீதியான எந்த கூட்டத்திலும் கமிஷனர் பங்கேற்கவில்லை. வியாழக்கிழமை மேற்கு வங்க தேர்தல் ஆணையம் நடத்திய கூட்டத்தில் கமிஷனர் ராஜீவ் குமார் பங்கேற்க வேண்டும். இந்த கூட்டத்தையும் அவர் தவிர்த்தார்

. 'கமிஷனர் ஏன் கூட்டத்தில் பங்கேற்கவில்லை' என்று மேற்கு வங்க அரசிடத்தில் தேர்தல் ஆணையம் கேள்வி எழுப்பியது. இதற்கு . மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியே நேரடியாகப் பதிலளித்தார். கமிஷனர் விடுமுறையில் இருப்பதாகவும் கூட்டத்தில் அவர் பங்கேற்காமல் போனதற்காக மன்னிப்பு கோருவதாகவும் தன் விளக்கத்தில் மம்தா கூறியுள்ளார். 

கடந்த 2013-ம் ஆண்டு சாரதா சிட்பண்ட் நிறுவனம் தொடங்கப்பட்டது. அடுத்த ஆண்டே பல ஆயிரம் கோடி அளவுக்கு நிதிமுறைகேடு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. சாரதா சிட்பன்ட் நிறுவனமும் மூடப்பட்டது. மக்களின் பணம் கோடிக்கணக்கில் சுருட்டப்பட்டதையடுத்து உச்சநீதிமன்றம் தலையிட்டது. தொடர்ந்து  ,சி.பி.ஐ தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க