ஹம்பி கோயில் தூண்களை இடித்த இளைஞர்கள் -கர்நாடகாவில் அதிர்ச்சி #Video | Hampi world heritage temple vandalised by hooligans

வெளியிடப்பட்ட நேரம்: 14:40 (03/02/2019)

கடைசி தொடர்பு:14:40 (03/02/2019)

ஹம்பி கோயில் தூண்களை இடித்த இளைஞர்கள் -கர்நாடகாவில் அதிர்ச்சி #Video

யுனெஸ்கோவின் பாதுகாக்கப்பட்ட  இடங்களில் பட்டியலிடப்பட்டுள்ள ஹம்பி கோயிலில் சில தூண்களை இளைஞர்கள் உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கோயில் உடைப்பு

விசயநகர பேரரசு காலத்தில் தலைநகரமாக ஹம்பி விளங்கியது. சுமார் 41.8 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு உள்ள இந்த நகரம், 'துங்கபத்ரா' ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. அழகான கற்கோயில்களும், அதில் நுட்பமான கலை நேர்த்தியோடு செதுக்கப்பட்ட சிற்பங்களும், அதைச் சுற்றியுள்ள மலைகளும் காண்போரை பிரமிக்கவைப்பவை. 

கர்நாடகாவில் பெல்லாரி மாவட்டத்தில்  தற்போது இந்த நகரம் உள்ளது. புகழ்பெற்ற விருபாக்ஷா கோயில் இந்த நகரத்தின் முக்கிய  அடையாளம். பழங்கால கட்டக்கலைக்கு இந்த நகரம் புகழ்பெற்றது. யுனெஸ்கோவின் பாதுகாக்கப்பட்ட இடமாகவும் ஹம்பி அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில், ' நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகை உலகில் காண வேண்டிய இடங்களில் இரண்டாவதாக  இந்த இடத்தைப் பட்டியலிட்டிருந்தது. 

ஹம்பி

இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை விருபாக்ஷா கோயிலின் சில தூண்களை இளைஞர்கள் கீழே  தள்ளி விட்டு உடைத்தனர். இதை காணொளியாகவும் எடுத்து வெளியிட்டனர். பாரம்பரியமிக்க பழம் பெருமைவாய்ந்த இடத்தில் நடந்த இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலீசார்  தேடி வருகின்றனர். 

 கோயில் உடைப்பு

பெல்லாரி மாவட்ட எஸ்.பி அருண் ரங்கராஜன், இத்தகைய செயலில் ஈடுபட்டவர்கள் விரைவில் பிடிபடுவார்கள். ஹம்பியில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும்' என்று தெரிவித்துள்ளார். 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க