`ஒவ்வொரு நாளும் மிகக் கடினமாக உள்ளது’ - தற்கொலைக்கு முன் ஹைதராபாத் ஐ.ஐ.டி மாணவர் உருக்கம் | IIT Hyderabad student wrote to his friends before suicide

வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (03/02/2019)

கடைசி தொடர்பு:17:30 (03/02/2019)

 `ஒவ்வொரு நாளும் மிகக் கடினமாக உள்ளது’ - தற்கொலைக்கு முன் ஹைதராபாத் ஐ.ஐ.டி மாணவர் உருக்கம்

 கடந்த 1-ம் தேதி ஹைதராபாத் ஐ.ஐ.டியை சேர்ந்த அனிருத்யா என்ற 21 வயது மாணவர் இரவு 1 மணியளவில் தன் கல்லூரி விடுதியின் ஏழாவது மாடியில் இருந்து போன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்து தவறி கீழே விழுந்து இறந்துவிட்டார்.

தற்கொலை

பிறகு இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது காவல்துறை. முதல்கட்ட விசாரணையில் மாணவர் தவறி விழவில்லை, இது தற்கொலை எனக் கூறினர்.

அனிருத்யா

இந்நிலையில் மாணவர் தற்கொலை செய்துகொள்ளும் முன் தன் நண்பர்களுக்கு அனுப்பிய மெயில் ஒன்றை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். அதில், மாணவர் அனிருத்யா தன் வாழ்க்கையைப் பற்றி மிகவும் உருக்கமாக எழுதியுள்ளார். அதில், “ என் எதிர்காலத்தை நினைத்துப் பார்க்கும்போது தற்போது நான் தற்கொலை செய்துகொள்ள எடுத்துள்ள முடிவு மிகச் சரியானதுதான். இனி என் வாழ்வில் எந்த சூழ்ச்சிகளும் இருக்கப்போவதில்லை. ஒவ்வொரு நாளும் எனக்கு மிகவும் கடினமாக சென்றுகொண்டிருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார். 

அனிருத்யா தான் தற்கொலை செய்துகொள்வதற்கு முன் மனநல மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை நடத்தியதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர் அனிருத்யா மன அழுத்தத்தின் காரணமாகவே தற்கொலை செய்துகொண்டுள்ளார் என உறுதி செய்துள்ள காவல்துறை அதற்கான காரணத்தையும் கண்டறியும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.