அப்படியே டபுள் மடங்கு! - சாரதா சிட்பண்ட் பல்லாயிரம் கோடியை சுருட்டியது எப்படி? | Here’s everything you need to know about Saradha chit fund scam

வெளியிடப்பட்ட நேரம்: 12:10 (04/02/2019)

கடைசி தொடர்பு:12:10 (04/02/2019)

அப்படியே டபுள் மடங்கு! - சாரதா சிட்பண்ட் பல்லாயிரம் கோடியை சுருட்டியது எப்படி?

மேற்கு வங்கக்காரர்கள் கால்பந்து வெறியர்கள். சாரதா சிட்பண்ட் மேற்கு வங்க மக்களின் இந்த கால்பந்து வெறியையும்கூட தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது. கொல்கத்தாவின் மிகவும் பாப்புலரான மோகன் பகான் அணியில் முதலீடு செய்தது. இப்படியா மக்களின் நாடித் துடிப்பை அறிந்து செயல்பட்ட சாரதா சிட்பண்ட். நிறுவனத்தை நம்பி முதலீடு செய்தவர்களில் 90 சதவிகிதம் அடித்தட்டு மக்கள். திரட்டிய தொகை ரூ. 20,000 கோடி முதல் ரூ.30,000 கோடி வரை என்கிறார்கள். 2013- ம் ஆண்டு சாரதா சிட்பண்ட் நிறுவனம் மூடப்பட, அப்பாவி மக்கள் வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அழுதார்கள். எந்தப் பயனும் இல்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சல்லிக்காசு திரும்பக் கிடைக்கவில்லை. 

சாரதா சிட்பண்ட்

சாரதா குழுமத்தில் 200-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் சங்கிலி போலச் செயல்பட்டு வந்தன. சுதிப்தோ சென் என்பவர் இதன் தலைவர். கிட்டத்தட்ட 16,000 ஊழியர்கள் இங்கு பணிபுரிந்தனர். மேற்கு வங்கத்தின் முக்கிய அரசியல் புள்ளிகளின் ஆதரவு இந்த நிறுவனத்துக்கு இருந்தது. செலிபிரிட்டிகளை அழைத்து விழா எடுத்து மக்கள் மத்தியில் பிராண்ட் வேல்யூவை கூட்டிக் காட்டியது.  துர்கா பூஜையும் மேற்கு வங்கத்தில் வெகு பிரபலம். துர்கா பூஜை நடத்த ஸ்பான்ஷர் செய்வதும் இந்த நிறுவனத்தின் வழக்கம். 

திரிணாமுல் கட்சியைச் சேர்ந்த பல முக்கிய பிரமுகர்கள் இந்த நிறுவனத்தால் லாபம் அடைந்ததாகச் சொல்லப்படுகிறது. அண்டை மாநிலங்களைச் சேர்ந்த அரசியல்வாதிகளுக்கும் சாரதா சிட்பண்ட் நிறுவனத்திடம் இருந்து பணம் பெற்று வந்தனர். காரணம், ஒடிசா, ஜார்க்கண்ட், திரிபுரா, அசாம் மாநிலங்களிலும் சாரதா சிட்பண்ட் நிறுவனம் நிதி திரட்டி மோசடியில் ஈடுபட்டது. 

ரோஸ்வேலி ஊழல் என்பது சாரதா சிட்பண்ட்டைவிடப் பெரிய நிதி மோசடி ஆகும். தபாஸ் பால், சுதீப் பாண்டேயோபாத்யா ஆகியோர் இந்த நிறுவனத்தின் முக்கியத் தூண்கள். ரோஸ்வேலி ஹோட்டல்ஸ், ரோஸ்வேலி ரியல் எஸ்டேட் போன்றவற்றில் மக்களை முதலீடு செய்ய வைத்தது. 2,3 ஆண்டுகளில் கட்டிய பணம் இரண்டு மடங்காகத் திரும்ப கிடைக்கும் என்று ஆசை காட்டியது .மேற்கு வங்கம், அசாம், பீகார் மக்களிடையே ரூ.40,000 கோடி வரை நிதி திரட்டியது. அதிக வட்டிக்கு  ஆசைப்பட்டு லட்சக்கணக்கான மக்கள் ரோஸ்வேலி நிறுவனத்தில் முதலீடு செய்தனர். அரசியல்வாதிகள், அதிகாரிகளை செமத்தையாக கவனித்து விட்டு மக்களுக்குப் பட்டை நாம் போட்டது இந்த நிறுவனம். 

இந்த நிதி முறைகேடுகளை கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமார் தலைமையிலான சிறப்பு படைதான் விசாரித்து வந்தது. விசாரணையில் தொய்வு காணப்படவே சி.பி.ஐ. வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க