உயிருக்கு ஆபத்து: சிறையில் சரணடைய சஞ்சய் தத் திடீர் மனு தாக்கல்

புனே: உயிருக்கு ஆபத்து இருப்பதால் நேரடியாக சிறையில் சரணடைய அனுமதி கோரி நடிகர் சஞ்சய் தத் தாக்கல் செய்த மனு தடா நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

1993ஆம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கில், நடிகர் சஞ்சய் தத்திற்கு 5 ஆண்டு காலம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இதையடுத்து, ஏப்ரல் 16ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் சஞ்சய் தத் சரணடைய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருவதால், சரணடைய 6 மாத காலம் அவகாசம் கோரி சஞ்சய் தத் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சரணடைய நான்கு வார கால அவகாசம் அளித்தது.

அந்த அவகாசம் நாளையுடன் முடியவுள்ள நிலையில், மேலும் அவகாசம் அளிக்குமாறு, சஞ்சய் தத்தை வைத்து படம் தயாரித்து வருவோர் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று நிராகரித்தது.

இந்த நிலையில்,  தடா நீதிமன்றத்தில் சஞ்சய் தத் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், தனக்கு பழமைவாதிகளால் ஆபத்து ஏற்படலாம் என்பதாலும், ஊடங்கங்களால் தொந்தரவு ஏற்படலாம் என்பதாலும், நேரடியாக சிறையிலேயே சரணடைய அனுமதிக்க வேண்டும் என சஞ்சய் தத் கோரியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சனாப், இது குறித்து சி.பி.ஐ. விளக்கமளிக்க உத்தரவிட்டதோடு, வழக்கு விசாரணை இன்று நடைபெறும் என்று அறிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!