வெளியிடப்பட்ட நேரம்: 09:17 (15/05/2013)

கடைசி தொடர்பு:09:17 (15/05/2013)

சித்தராமையாவுக்கு எதிராக காங்கிரசார் போர்க் கொடி

பெங்களூரு: கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து சித்தராமையாவை நீக்கும் வரை போராட்டம் தொடரும் என்று அம்மாநில காங்கிரஸார் கூறியுள்ள நிலையில், புதிய அமைச்சரவை குறித்து ஆலோசனை நடத்துவதற்காக, சித்தராமையா இன்று டெல்லி செல்கிறார்.

மத்திய அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கேவிற்கு முதல்வர் பதவி வழங்கப்படாததால், அதிருப்தியடைந்த அவரது ஆதரவாளர்கள், சித்தராமையாவிற்கு எதிராக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள கட்சியின் அலுவலத்தை காங்கிரஸார் அடித்து நொறுக்கினர்.

இந்த நிலையில், புதிய அமைச்சரவை குறித்து ஆலோசனை நடத்துவதற்காக, சித்தராமையா இன்று டெல்லி செல்கிறார். பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்து, கர்நாடகாவில் புதிய அமைச்சரவை உருவாக்குவது பற்றி அவர் ஆலோசனை செய்ய உள்ளார்.

இதையடுத்து, பெங்களூரு திரும்பிய பின்னர், அமைச்சரவை பட்டியலை அவர் ஆளுநரிடம் சமர்ப்பிப்பார் எனத் தெரிகிறது.

சர்ச்சைகளில் சிக்காத நபர்களுக்கே கர்நாடக அமைச்சரவையில் இடமளிக்க காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், கர்நாடகாவில் நடந்து வரும் உள்கட்சி பிரச்னை குறித்தும் பிரதமர் மற்றும் சோனியாவோடு சித்தராமையா ஆலோசனை நடத்துவார் என்று கூறப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்