`எதுவும் இலவசம் கிடையாது; ரூ.102 கோடி செலுத்தவும்!'- கேரளாவுக்குப் பாதுகாப்புத்துறை தகவல் | Centre slaps Rs 102cr bill for IAF's expenses fro kerala

வெளியிடப்பட்ட நேரம்: 12:55 (05/02/2019)

கடைசி தொடர்பு:12:55 (05/02/2019)

`எதுவும் இலவசம் கிடையாது; ரூ.102 கோடி செலுத்தவும்!'- கேரளாவுக்குப் பாதுகாப்புத்துறை தகவல்

கேரள பெருவெள்ளத்தில்  மீட்புப்பணியின்போது ஏற்பட்ட செலவினங்களுக்காக ரூ.102 கோடியைச் செலுத்த பாதுகாப்புத்துறை அமைச்சகம் கேரளாவுக்கு பில் அனுப்பியுள்ளது. 

கேரளா வெள்ளம்

ராஜ்யசபாவில் துண்டு சீட்டு மூலம் கேட்கப்பட்ட கேள்விக்குப் பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் சுபாஷ் பாம்ரே அளித்த பதிலில், ``கேரள வெள்ளத்தின்போது 517 முறை விமானப்படை விமானங்கள் பறந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளன. 3,787 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். 1,350 டன் சரக்குகள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. 634 முறை ஹெலிகாப்டர் பறந்து சென்று 547 பேரை மீட்டுள்ளது. 247 டன் சரக்குகள் ஹெலிகாப்டர் வழியாகக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

இதற்கான செலவினம் ரூ.102 கோடி ஏற்பட்டுள்ளது. கேரள அரசுக்கு இதற்கான பில் அனுப்பப்பட்டுள்ளது. இதுபோல் கடற்படை,  தரைப்படையும் தனித்தனியாக பில்கள் அனுப்பும். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் 30,000 கோடி மதிப்புள்ள சொத்துகள் சேதமடைந்தன. ஏராளமானோர் உயிரிழந்தனர். மக்களை மீட்கும் பணிகளுக்கு பில் அனுப்புவது எந்த விதத்தில் நியாயம் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஏற்கெனவே கேள்வி எழுப்பியிருந்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க