ஏர் இந்தியா விமானம் வழங்கிய இட்லியில் கரப்பான் பூச்சி! - புகாரளித்தும் நொந்துபோன பயணி | Man finds cockroach in food served Air India flight

வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (05/02/2019)

கடைசி தொடர்பு:15:00 (05/02/2019)

ஏர் இந்தியா விமானம் வழங்கிய இட்லியில் கரப்பான் பூச்சி! - புகாரளித்தும் நொந்துபோன பயணி

 

ஏர் இந்தியா விமானம் வழங்கிய  உணவில் கரப்பான் பூச்சி

ர்  இந்தியா விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி இருந்தது பயணிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 

கடந்த சனிக்கிழமை போபாலில் இருந்து மும்பைச் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் காலை உணவு வழங்கப்பட்டுள்ளது. அதில் ரோஹித் ராஜ் சிங் சௌஹான் என்பவருக்கு வழங்கப்பட்ட இட்லி, வடை மற்றும் சாம்பாரில் கரப்பான்பூச்சி மிதந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ரோஹித் ராஜ் சிங் சௌஹான் உடனடியாக உணவு வழங்கும் கேர்டேக்கரிடம் இது குறித்துப் புகார் தெரிவித்துள்ளார். அந்தக் கேர் டேக்கர் அவருடைய அந்தப் புகாரை மறுத்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதிக் காத்து வந்துள்ளார்.

மிகவும் வருத்தமடைந்த ரோஹித் ராஜ் சிங் சௌஹான், விமானம் தரையிறங்கியதும் உடனடியாக ஏர் இந்தியா தலைமை அதிகாரிக்கு எழுத்துபூர்வமாக புகார் கடிதம் கொடுத்துள்ளார். அதன்பிறகும் ஏர் இந்தியா நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், உடனடியாக அவருடைய செல்போன் மூலமாக எடுத்த புகைப்படங்களை ட்விட்டரில் பதிவிட்டு ஏர் இந்தியா விமானத்தின் டிவிட் பக்கத்தையும் டேக் செய்து 'ஏர் இந்தியா நிறுவனத்தின் சேவை கண்டு தாம் அதிர்ச்சி அடைவதாக வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார்.

இந்த நிலையில், ஏர் இந்தியா நிறுவனத்தின் மேலாளர் ராஜேந்திர மல்ஹோத்ரா, ரோஹித் ராஜ்சிங் சௌஹானின் புகார் கடிதம் தமக்கு வரவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் நடந்து இரண்டு நாள்கள் ஆன நிலையில், தற்போது ஏர் இந்தியா நிறுவனம் தற்போது மன்னிப்புக் கேட்டு வருகிறது. அதில் முதற்கட்ட நடவடிக்கையாக இது குறித்து  ஆய்வு செய்து வருவதாகவும்,  விழிப்புடன் பணி  செய்யாத பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளது.