`அவர்களைத் தவிர வேறு யாரும் வந்ததில்லை’ - பிரியங்கா காந்தியால் நெகிழும் மாற்றுத்திறனாளி சிறுவனின் தந்தை | Priyanka Gandhi fulfilling her social responsibility as a leader

வெளியிடப்பட்ட நேரம்: 08:39 (06/02/2019)

கடைசி தொடர்பு:08:39 (06/02/2019)

`அவர்களைத் தவிர வேறு யாரும் வந்ததில்லை’ - பிரியங்கா காந்தியால் நெகிழும் மாற்றுத்திறனாளி சிறுவனின் தந்தை

இந்தியாவில் விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் தங்கள் கட்சிகளைப் பலப்படுத்துவதிலும், கூட்டணிகளை இறுதி செய்வதிலும், தேர்தல் பொறுப்பாளர்களை நியமிப்பதிலும் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரியான பிரியங்கா காந்திக்கு உத்தரப் பிரதேசத்தின் கிழக்குப் பகுதியின் காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளராகப் பதவி வழங்கப்பட்டுள்ளது. 

பிரியங்கா

நாடாளுமன்றத் தேர்தல் வேலைகளில் அதிகம் கவனம் செலுத்திவரும் பிரியங்கா அவ்வப்போது அமைதியாக சில சமூக சேவைகளையும் செய்துவருகிறார். டெல்லி, அவுரங்கசீர் பகுதியில் உள்ள ஒரு மாற்றுத்திறனாளி சிறுவன் அஷீஷை நேரில் சந்தித்து அவரின் மருத்துவத்துக்காக உதவியுள்ளார்.

மாற்றுதிறனாளி சிறுவன்

இது பற்றி சிறுவன் அஷீஷின் தந்தை கூறும்போது, ``என் மகனின் மருத்துவச் செலவுகளைக் கடந்த சில வருடங்களாக பிரியங்கா தான் செய்து வருகிறார். அவர் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வந்து என் மகனைப் பார்த்துவிட்டுச் செல்வார். அவரும் ராகுல் காந்தியும் எங்களை அவர்களின் குடும்பத்தினர் போலவே நடத்துகின்றனர். பிரியங்கா, ராகுலைத் தவிர வேறு எந்த தலைவர்களும் இதுவரை இங்கு வந்ததில்லை. நேற்று என் வீட்டுக்கு வந்த பிரியங்கா, மகனின் உடல் நிலை குறித்து விசாரித்துவிட்டு அவனுக்கு உதவி செய்துவிட்டுச் சென்றார்’ எனத் தெரிவித்துள்ளார்.

பிரியங்கா - ராகுல்

இதேபோல் கடந்த 2012-ம் ஆண்டு டெல்லியில் பேருந்து ஒன்றில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இறந்த மாணவி நிர்பயாவின் சகோதரர் கல்விக்கு ராகுல் காந்தி உதவியுள்ளார். நிர்பயாவின் சகோதரர் தற்போது விமானியாகப் பயிற்சி பெற்று வருகிறார். அவருக்கு அந்தத் துறையைத் தேர்ந்தெடுக்க உதவி அவருக்கான கல்விச் செலவையும் தானே ஏற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.