``நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை”- காந்தி உருவ பொம்மையை அவமதித்த பூஜா பாண்டே | We didn't do anything wrong says pooja pondey

வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (06/02/2019)

கடைசி தொடர்பு:23:00 (06/02/2019)

``நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை”- காந்தி உருவ பொம்மையை அவமதித்த பூஜா பாண்டே

காத்மா காந்தியின் 71வது நினைவு தினம் கடந்த ஜனவரி 30-ம் தேதி நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. உத்தர பிரதேச மாநிலம் அலிகர் அருகே உள்ள நவ்ரங்காபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அகில பாரத இந்து மகா சபா அமைப்பின் தேசியச் செயலாளர் பூஜா பாண்டே, காந்தியின் உருவ பொம்மையை அவமதித்து துப்பாக்கியால் சுடுவது போன்ற காணொலி சமூக வலைதளங்களில் பரவியது. இந்தச் செயலை இந்தியா முழுவதும் உள்ள பலக் கட்சி தலைவர்களும் பொது மக்களும் கண்டித்தனர்.

பூஜா

இதைத் தொடர்ந்து அலிகர் நகரைச் சேர்ந்த காவல்துறையினர், பூஜா பாண்டே மற்றும் அவருடைய கணவர் அசோக் பாண்டே உள்ளிட்ட இந்து மகா சபாவைச் சார்ந்த 12 பேர் மீது பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட 3 மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பூஜா பாண்டேவைத் தேடி வந்தனர். இந்நிலையில் அலிகரில் தங்கியிருந்த பூஜா பாண்டே மற்றும் அவருடைய கணவர் அசோக் பாண்டேவை உத்தர பிரதேசக் காவல்துறையினர் கைது செய்து அருகில் இருந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

 

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பூஜா பாண்டே, ``நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. அரசியல் அமைப்பு சாசனம் எங்களுக்கு வழங்கிய சட்டத்தைத்தான் பயன்படுத்தினோம்”.என்றார்.