"சம்பளத்தை திண்ணே தீர்த்துவிடுவார்!" சி.பி.எம் பெண் நிர்வாகியைக் கிண்டலடித்த அமைச்சர்மீது வழக்கு | kerala court directs FIR against minister sudhakaran

வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (06/02/2019)

கடைசி தொடர்பு:21:30 (06/02/2019)

"சம்பளத்தை திண்ணே தீர்த்துவிடுவார்!" சி.பி.எம் பெண் நிர்வாகியைக் கிண்டலடித்த அமைச்சர்மீது வழக்கு

மார்க்சிஸ்ட் கட்சியின்  பெண் நிர்வாகியைத் தகாத வார்த்தையால் பேசிய கேரள அமைச்சர்மீது நீதிமன்றம் வழக்குப்பதிவுசெய்ய உத்தரவிட்டுள்ளது .

 

மார்க்சிஸ்ட் கட்சியின் கொட்டாரா வாலாவு, தோட்டப்பாலி முன்னாள் மண்டலத் தலைவரும் அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைவர், உஷாஷெலி. இவர், மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த  அமைச்சர் சுதாகரனின் தனி அலுவலகப் பணியாளராவும் இருந்துள்ளார். இந்த நிலையில், அமைச்சர் சுதாகரன், கட்சி ஏற்பாடுசெய்திருந்த பொது மேடையில் பேசியவர் 'வாங்குகிற சம்பளத்தை திண்ணே தீர்த்து விடுகிறார் உஷா ஷெலி. இது அவருக்கே ஆபத்தானது' என்று பேசியுள்ளார்.அமைச்சரின் இந்தப் பேச்சுகுறித்து காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்  உஷா ஷெல்லி. ஆனால், அவருடைய புகாரை போலீஸார் ஏற்க மறுத்துள்ளனர். 

இந்த நிலையில், இது தொடர்பாக நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், 'தன்னைத் தகாத வார்த்தைகளால் தொடர்ந்து அமைச்சர் சுதாகரன் பேசிவருவதாகக் கூறியுள்ளார். வாங்குகிற சம்பளத்தை  திண்ணே தீர்த்துவிடுவார் 'என்று கிண்டலடித்தார். அதே போன்று எம்.எல்.ஏ-க்கள் மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டப்பட்ட தொட்டப்பள்ளி கிருஷ்ணன்சி - லக்ஷ்மி தோப்பு சாலை திறப்பு விழா  2016 -ம் ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி நடந்தது. அந்த நிகழ்ச்சி துவங்கப்படுவதற்கு முன்னதாக வந்த சுதாகரன், அங்கு இருந்த உஷா ஷெலியைத் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசினார் என்று அந்த  மனுவில் கூறியுள்ளார். இது தொடர்பான விசாரணை  நடைபெற்றுவந்த நிலையில், அமைச்சர் சுதாகரன் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அடுத்த மாதம்          28-ம் தேதிக்குள் அமைச்சர் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.