``இனியாவது ராப் கலாசாரம் இந்தியாவில் பரவ வேண்டும்" - `கல்லி பாய்' ராப்பர்ஸ்  | "Hereafter Rap culture should form in India" 'Gully Boy rappers

வெளியிடப்பட்ட நேரம்: 21:50 (06/02/2019)

கடைசி தொடர்பு:21:50 (06/02/2019)

``இனியாவது ராப் கலாசாரம் இந்தியாவில் பரவ வேண்டும்" - `கல்லி பாய்' ராப்பர்ஸ் 

``இனியாவது ராப் கலாசாரம் இந்தியாவில் பரவ வேண்டும்

ரன்வீர் சிங் மற்றும் ஆலியா பட் நடித்து வரும் பிப்ரவரி 14- ம் தேதி ரிலீஸாகவிருக்கும் திரைப்படம் `கல்லி பாய்'. இப்படம் முன்னேறத் துடிக்கும் இளம் ராப் பாடகர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது.

Gully boy

இதில் மும்பையைச் சேர்ந்த ராப் பாடகர்களான டிவைன் மற்றும் நேசி படத்தின் பாடல்களைப் பாடியிருக்கின்றனர். 2011- ம் ஆண்டு மும்பையில் இவர்கள் தங்களது ராப் வாழ்க்கையைத் தொடங்கியிருக்கின்றனர். இத்தனை வருடங்களாகச் சிறு சிறு தெருவோர மேடை கச்சேரிகளில் பாடி தங்களை வளர்த்துக்கொண்டு தற்போது `கல்லி பாய்' படத்தில் `மேரே கல்லி மேன்' எனும் பாடலைப் பாடியிருக்கின்றனர். இதில் டிவைன் சமீபத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ``ஹிப்-ஹாப் கலாசாரம் தெருவோரங்களில் மட்டுமே இருந்து வருகிறது. இன்னும் அது ஒரு தகுந்த மியூசிக் பிளாட்ஃபார்மில் அங்கீகரிக்கப்படவில்லை. இந்தப் படம் மூலமாக இந்தியாவின் பல்வேறு இடங்களில் ஹிப்-ஹாப் கலாசாரம் பரவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்றார். 

கல்லி பாய்

மேலும், இது குறித்து நேஸி, ``இப்படம் மூலம் ஹிப்-ஹாப் குறித்த விழிப்பு உணர்வும் சிந்தனையும் அதிகமாகும் என்று நம்புகிறோம். நிறைய திறமையான ராப் பாடகர்கள் வெளிச்சத்துக்கு வரவேண்டும் என்பதே எங்களின் கனவு. இதில் ரன்வீருடன் சேர்ந்து பாடி நடித்ததற்காக நாங்கள் இருவரும் பெருமைப்படுகிறோம். இவர் ராப் பாடகர்களின் நடை, உடை, பாவனை ஆகியவற்றை உன்னிப்பாகக் கவனித்து அதை அப்படியே திரையில் பிரதிபலித்திருக்கிறார்" என்றார். நேசி, தனது 13- ம் வயதிலிருந்தே ராப் பாடி வருபவர். சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்பு ஐ-பாடில் ஷூட் செய்யப்பட்டு யூ-டியூபில் வெளியிடப்பட்ட `ஆபத்' எனும் இவரது வீடியோ கிட்டத்தட்ட 4.5 லட்சம் பார்வையாளர்களைக் கவர்ந்து வெற்றி கண்டது என்பது குறிப்பிடத்தக்கது.