‘தாலிக்கு தங்கம், 1 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி’ - அஸ்ஸாம் பட்ஜெட்டில் கவர்ச்சிகரமான திட்டங்கள் | one kg rice per rupee in assam budget

வெளியிடப்பட்ட நேரம்: 21:40 (07/02/2019)

கடைசி தொடர்பு:21:40 (07/02/2019)

‘தாலிக்கு தங்கம், 1 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி’ - அஸ்ஸாம் பட்ஜெட்டில் கவர்ச்சிகரமான திட்டங்கள்

மிழகத்தில் இலவச அரிசி மற்றும் பெண்களின் திருமணத்திற்கு தாலிக்கு தங்கம் வழங்குவது ஆகிய திட்டங்கள் பல ஆண்டுகளாக தமிழகத்தில் நடைமுறையில் இருந்துவருகின்றன.  இந்நிலையில், அஸ்ஸாமில் ஆட்சியில் உள்ள பி.ஜே.பி அரசு அம்மாநிலத்தின் 2019-20-ம் ஆண்டிற்கான   பட்ஜெட்டை  நிதி அமைச்சர் ஹிமந்தா பிஸ்வான் சர்மா, கடந்த புதன்கிழமை தாக்கல்செய்தார். இந்த மாத தொடக்கத்தில், பி.ஜே.பி அரசு, தனி நபர் வருமான வரி உச்சவரம்பு உயர்வு உள்ளிட்ட பல அதிரடியான திட்டங்களுடன், மத்திய பட்ஜெட்டை தாக்கல்செய்தது.

அஸ்ஸாம் பட்ஜெட்

அஸ்ஸாமின் இந்த  நிதியாண்டு பட்ஜெட்டில், புதிதாகப் பல திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. பல ஆண்டுகளாக தமிழகத்தில் நடைமுறையில் இருந்த 1 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி வழங்கும் திட்டத்தை அஸ்ஸாமில் அறிமுகப்படுத்தியுள்ளனர். அதேபோல, பெண்களின் திருமணத்திற்கு 38,000 ரூபாய் மதிப்பில் தாலிக்கு 12 கிராம் தங்கம் வழங்கப்படும். கணவனை இழந்த 45 வயது பெண்களுக்கு உடனடி நிவாரணமாக 25,000 ரூபாய் வழங்கப்பட்டு, அவர்கள் 60 வயதை அடையும் வரை மாத உதவித் தொகையாக 250 ரூபாய் வழங்கப்படும் எனப் பல திட்டங்களை அறிவித்துள்ளனர்.  விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு ஊக்கத் தொகையாக, மாதம் தோறும் 700 ரூபாய் வழங்குவது போன்ற திட்டங்களையும் அறிவித்துள்ளனர்.

இலவச மிதிவண்டி திட்டம்

தமிழகத்தில் ஏற்கெனவே, மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்குவது மற்றும் பெண்களுக்கு மானிய விலையில்  ஸ்கூட்டர் வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. அதேபோல, அஸ்ஸாமில் பெண் கல்வியை ஊக்கப்படுத்தும் வகையில், மேல்நிலைப் பள்ளி வகுப்பில் அதிக மதிப்பெண் பெரும் மாணவிகளுக்கு பேட்டரிமூலம் இயங்கும் இருசக்கர மோட்டார் வாகனம் வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.