இந்தியாவில், கடந்த டிசம்பர் மாதத்தைக் காட்டிலும் ஜனவரி மாதத்தில் கார் விற்பனை அதிகரித்துள்ளது.
இந்தியாவில் தயாரிக்கப்படும் கார் தயாரிப்பில், கடந்த டிசம்பரில் 2,36,091 கார்கள் மட்டுமே விற்பனையான நிலையில், ஜனவரியில் 2,76,983 கார்கள் விற்பனையாகியுள்ளன. ஒட்டுமொத்தமாக விற்பனையான கார்களை ஒப்பிடும்போது, 40,892 கார்கள் அதிகமாக விற்பனையாகியுள்ளன.
டாப் 10 கார்களின் பட்டியலில், விற்பனையில் முதலிடத்தில் இருக்கும் மாருதியின் ஆல்ட்டோ மாடலில் 23,360 கார்கள் விற்பனையாகியுள்ளன. டிசம்பர் மாதத்தைக் காட்டிலும் 1,761 கார்கள் குறைவு. இரண்டாவது இடத்தில் இருக்கும் டிசையர் மாடலில், ஜனவரியில் 2,276 கார்கள் அதிகம் விற்பனையாகியுள்ளன. இதைத் தொடர்ந்து, ஸ்விஃப்ட் மாடலில் 18,795 கார்களும், பெலினோ மாடலில் 16,717 கார்களும், விட்டாரா பிரெஸ்ஸா மாடலில் 13,172 கார்களும் விற்பனையாகியுள்ளன. ஹூண்டாயின் எலீட் i20 மாடலில் 11,749 கார்களும், க்ரெட்டா மாடலில் 10,314 கார்களும், கிராண்ட் i10 மாடலில் 10,285 கார்களும் விற்பனையாகியுள்ளன. தொடர்ந்து மாருதியின் வேகன்-ஆர் மாடலில் 10,048 கார்களும், செலெரியோ மாடலில் 9,217 கார்களும் விற்பனையாகியுள்ளன. டிசம்பரில் மூன்றாவது இடத்தில் இருந்த ஹூண்டாய் எலீட் i20 மாடல், ஜனவரியில் 6-வது இடத்தைப் பிடித்துள்ளது.
'நிஸான் கிக்ஸ்' மாடலில் டிசம்பர் மாதம் 11 கார்கள் மட்டுமே விற்பனையான நிலையில், ஜனவரியில் 1,370 கார்கள் விற்பனையாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனவரி மாதம் விற்பனையான டாப் 10 கார்கள்!
மாடல் | யூனிட் |
மாருதி ஆல்ட்டோ | 23,360 |
.மாருதி டிசையர் | 19,073 |
மாருதி ஸ்விஃப்ட் | 18,795 |
மாருதி பெலினோ | 16,717 |
மாருதி விட்டாரா பிரெஸ்ஸா | 13,172 |
ஹூண்டாய் எலீட் i20 | 11,749 |
ஹூண்டாய் க்ரெட்டா | 10,314 |
ஹூண்டாய் கிராண்ட் i10 | 10,285 |
மாருதி வேகன்-ஆர் | 10,048 |
மாருதி செலெரியோ | 9,217 |
