‘எம்.எல்.ஏ-க்களிடம் பேரம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர்!’ - ஆடியோ வெளியிட்ட முதல்வர் | kumarasamy release audio about bjp

வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (08/02/2019)

கடைசி தொடர்பு:20:40 (08/02/2019)

‘எம்.எல்.ஏ-க்களிடம் பேரம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர்!’ - ஆடியோ வெளியிட்ட முதல்வர்

டந்த ஆண்டு நடந்துமுடிந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலில், எந்தக் கட்சிக்கும் போதிய பெரும்பான்மை கிடைக்காத நிலையில், மதச் சார்பற்ற ஜனதாதளமும், காங்கிரஸும்  கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தனர். மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சார்ந்த குமாரசாமி கர்நாடக முதல்வராகப் பதவி ஏற்றார். இந்நிலையில், “ ஆபரேஷன் தாமரை என்ற பெயரில் எங்கள் கட்சியைச் சார்ந்த ஒரு  எம்.எல்.ஏ -வுக்கு 50 கோடி வீதம் 1000 கோடி ரூபாயில் 20 எம்.எல்.ஏ-க்களை பி.ஜே.பி தங்கள் பக்கம் இழுக்க பேரம் பேசுகின்றனர்” என காங்கிரஸ் கட்சித் தலைவரும் முன்னாள் கர்நாடகா முதல்வருமான சித்தராமய்யா குற்றம் சாட்டியிருந்தார்.

ஆடியோ வெளியிட்ட குமாரசாமி

இந்தச் சூழலில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த கர்நாடக முதல்வர் குமாரசாமி, ஒரு ஆடியோவை வெளியிட்டார். அந்த ஆடியோவில் பி.ஜே.பி-யின் தலைவர் எடியூரப்பா, மதச்சார்பற்ற ஜனதா கட்சி எம்.எல்.ஏ-க்களுடன் 25 லட்சம் ரூபாய் பணமும், அமைச்சர் பதவியும் வழங்கப்படும் எனச் சொல்லி பேரம் பேசுவதுபோன்று இடம்பெற்றிருந்தது.

எடியூரப்பா

இந்நிலையில், இதற்குப் பதிலளித்துள்ள எடியூரப்பா, “இந்தக் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது. ஒருவேளை  இந்த ஆடியோ உண்மை என நிரூபிக்கப்பட்டால், அரசியலில் இருந்தே துறவறம் செய்யத் தயார்” என்று கூறியுள்ளார்.