`வீடியோவா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா?' - பியூஷ் கோயலை கலாய்க்கும் நெட்டிசன்கள் | Railway Minister Piyush Goyal trolled for twitter video

வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (11/02/2019)

கடைசி தொடர்பு:15:00 (11/02/2019)

`வீடியோவா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா?' - பியூஷ் கோயலை கலாய்க்கும் நெட்டிசன்கள்

இந்த மாதம் பிப்ரவரி 15 முதல் இயக்கத்துக்கு வரும் `வந்தே பாரத்' ரயில்தான் இந்தியாவின் மிகவேகமாக ரயிலாக இனி இருக்கும். மணிக்கு சுமார் 180 கிலோமீட்டர் வேகத்தை எட்டுகிறது இந்த ரயில். இன்ஜின் இல்லாத புதிய Train 18 மாடலில் வடிவமைக்கப்பட்டிருக்கும் ரயிலான இது புது டெல்லி-வாரணாசி இடையே இயங்கவுள்ளது. தற்போது இதன் சோதனை ஓட்டத்தின் வீடியோ ஒன்றை மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் ஷேர் செய்ய இப்போது நெட்டிசன்களின் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகியுள்ளார்.

அப்படி என்ன இருந்தது அந்த வீடியோவில் என்று கேட்கிறீர்களா?, ரயில் நிலையம் ஒன்றை அதிவேகத்தில் `வந்தே பாரத்' கடக்கும் வீடியோ ஒன்றை , ``மின்னல் வேகத்தில் கடந்துசெல்லும் 'make in India' திட்டத்தில் உருவாக்கப்பட்ட முதல் semi high-speed ரயிலான வந்தே பாரத்தைப் பாருங்கள்" என்று பதிவிட்டிருந்தார். ஆனால், இவர் பதிவிட்டிருந்த வீடியோ ரயில் அதிவேகத்தில் செல்வதைபோல் காட்ட x2 வேகம் கூட்டப்பட்டிருந்தது. இந்த 'வாம்மா மின்னல்' வீடியோவை நெட்டிசன்கள் எளிதில் கண்டறிந்துள்ளனர். இதன் ஒரிஜினல் வீடியோ எதுவென்றும் கண்டுபிடித்துவிட்டனர்.

 

 

ஒரிஜினல் வீடியோ

Rail mail என்ற Youtube சேனலில் டிசம்பர் மாதம் பதிவான வீடியோ இது. சாதாரணமாகவே வேகமாகச் செல்வது தெரியத்தானே செய்கிறது, எதற்கு இப்படிச் செய்ய வேண்டும் எனப் பலரும் கேள்வி எழுப்பிவருகின்றனர். இந்த வீடியோவை பலரும் கலாய்க்க அது இப்போது வைரல். அவற்றுள் சில கீழே,

ட்விட்டர்

ட்விட்டர்

ட்விட்டர் பியூஷ்

நீங்க எப்படி பீல் பண்றீங்க