சைக்கிள்கள் மூலமாக உணவுப்பொருள் டெலிவரி - ஜொமோட்டோ புதுமுயற்சி! | zomato delivery by bicycles

வெளியிடப்பட்ட நேரம்: 21:45 (11/02/2019)

கடைசி தொடர்பு:21:59 (11/02/2019)

சைக்கிள்கள் மூலமாக உணவுப்பொருள் டெலிவரி - ஜொமோட்டோ புதுமுயற்சி!

சைக்கிள்கள்மூலம் குறுகலான தெருக்களிலும் எளிதாக நுழைந்து டெலிவரி செய்ய இயலும். போக்குவரத்து நெருக்கடியால் பெரிதும் பாதிக்கப்படாமல் பயணிக்கலாம். மேலும், வண்டியை நிறுத்துவதற்காக இடம்தேடி அலைய வேண்டிய கஷ்டமில்லை, சிறிய இடத்திலேயே எளிதாகப் பார்க்கிங் செய்துகொள்ளலாம்.

உணவுப்பொருள் விநியோக நிறுவனமான ஜொமோட்டோ இனி சைக்கிள்கள் மூலமாகவும் உணவுப்பொருள்களை சப்ளை செய்யவிருக்கிறது. இதற்காக சைக்கிள் ஷேரிங் மற்றும் சைக்கிள் ஸ்டார் அப் நிறுவனங்களான மொபைசை, இ-ஹிரன், டிஎன்டி, யூலு மற்றும் ஜூம்கார்'ஸ் பிஇடிஎல் ஆகிய நிறுவனங்களுடன் ஜொமோட்டோ இணைந்து செயல்படவுள்ளது.

ஜொமட்டோ

இனி ஜொமோட்டோ நிறுவனத்தின் பணியாளர்கள், பைக்குகளில் உணவுப்பொருள்களை டெலிவரி செய்வதோடு, சாதாரண மற்றும் எலக்ட்ரிக் சைக்கிள்கள் மூலமாகவும் உணவு டெலிவரி செய்வார்கள். சைக்கிள்கள் மூலமாக சராசரியாக 2.5 கிலோமீட்டர்வரை டெலிவரி செய்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது. உணவுப்பொருள்கள் டெலிவரிக்கு சைக்கிள்களைப் பயன்படுத்துவதில் பல சாதகமான அம்சங்கள் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. சைக்கிள்கள்மூலம் குறுகலான தெருக்களிலும் எளிதாக நுழைந்து டெலிவரி செய்ய இயலும். போக்குவரத்து நெருக்கடியால் பெரிதும் பாதிக்கப்படாமல் பயணிக்கலாம். மேலும், வண்டியை நிறுத்துவதற்காக இடம்தேடி அலைய வேண்டிய கஷ்டமில்லை, சிறிய இடத்திலேயே எளிதாகப் பார்க்கிங் செய்துகொள்ளலாம்.

இதில் குறிப்பிடப்படாத ஒரு முக்கியமான நன்மை, புகை மாசுவால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படாமல் இருப்பதாகும். வாகனங்கள் பெருகியுள்ள காலகட்டத்தில் ஜொமோட்டோ நிறுவனத்தின் இத்தகைய நடவடிக்கை வரவேற்கத்தக்கதாகும். சைக்கிள்களைப் பயன்படுத்துவதன் மூலம் மேலும் பலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.