நாடாளுமன்றத்தில் இன்று ரஃபேல் சி.ஏ.ஜி. அறிக்கை தாக்கல்! | Rafael CAG of Parliament today File statement

வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (12/02/2019)

கடைசி தொடர்பு:07:02 (12/02/2019)

நாடாளுமன்றத்தில் இன்று ரஃபேல் சி.ஏ.ஜி. அறிக்கை தாக்கல்!

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக சி.ஏ.ஜி. அறிக்கையை மத்திய அரசு இன்று (12-ம் தேதி) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவிருக்கிறது.

ஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக, காங்கிரஸ் மற்றும் எதிர்க் கட்சிகள், ஆளும் பி.ஜே.பி. அரசைத் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றன. இதுதொடர்பாக நாடாளுமன்ற அவைகள் பல தடவை முடக்கப்பட்டதோடு, மத்திய அரசும் எதிர்க்கட்சிகளும் விவாதம் நடத்திவருவதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக சி.ஏ.ஜி. அறிக்கையை மத்திய அரசு இன்று (12-ம் தேதி) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவிருக்கிறது.

நாடாளுமன்றம் - ரஃபேல் ஒப்பந்தம்

பிரான்ஸிடமிருந்து 126 ரஃபேல் போர் விமானங்களுக்குப் பதிலாக 36 விமானங்களை வாங்குவதற்குப் பிரதமர் மோடி மேற்கொண்ட முடிவில் விதிமுறைகள் மீறப்பட்டிருக்கின்றன எனவும்,  இதன்மூலம் அரசு கருவூலத்துக்கு இழப்பு நேரிட்டுள்ளது எனவும் மத்திய அரசு மீது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை வைத்தன. இந்தக் குற்றச்சாட்டு, குறிப்பாகப் பிரதமர் மோடி மீது வைக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக, நாடாளுமன்ற விவாதங்கள், கட்சிப் பொதுக்கூட்டங்கள் என அனைத்திலும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. மத்திய அரசும், ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை என்று எதிர்க்கட்சி சொல்லும் குற்றச்சாட்டுகளுக்குத் தொடர்ந்து மறுப்பு தெரிவித்துவருகிறது. 

இதனிடையே, இந்த ஒப்பந்தம் குறித்து மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி ராஜீவ் மகரிஷி தணிக்கை செய்தார். அவர் தணிக்கை செய்த அறிக்கை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. நாடாளுமன்றக் கூட்டத்தொடர் வரும் புதன்கிழமையுடன் நிறைவுபெறவுள்ள நிலையில், ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக சி.ஏ.ஜி. அறிக்கை இன்று (12-ம் தேதி)  தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்த அறிக்கையில் தேசத்தின் பாதுகாப்பு நலன் கருதி விலை குறித்தான தகவல்கள் எதுவும் வெளியிடப்படாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க