டெல்லி நட்சத்திர ஹோட்டலில் தீவிபத்து - அதிகாலையில் 9 பேர் பலியான சோகம்! | 9 dead in the fire that broke out in Hotel Arpit Palace in delhi Karol Bagh today

வெளியிடப்பட்ட நேரம்: 09:37 (12/02/2019)

கடைசி தொடர்பு:13:05 (12/02/2019)

டெல்லி நட்சத்திர ஹோட்டலில் தீவிபத்து - அதிகாலையில் 9 பேர் பலியான சோகம்!

டெல்லி கரோல்பாக் பகுதியில் உள்ள ஹோட்டலில் தீப்பிடித்ததில் 9 பேர் உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.

தீவிபத்து

டெல்லியின் கரோல் பாக் பகுதியில் அர்பிட் பேலஸ் என்ற நட்சத்திர ஹோட்டல் ஒன்று இயங்கி வருகிறது. நான்கு மாடிகள் கொண்ட இந்த ஹோட்டலில் சுமார் 40 அறைகள் உள்ளன. சுமார் 60 பேர் தங்கியிருந்ததாக கூறப்படும் நிலையில், அதிகாலை நிறைய பேர் தூங்கிக்கொண்டிருந்தனர். இன்று அதிகாலை 4.30 மணி அளவில் இந்த ஹோட்டலில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.

தீவிபத்து

ஹோட்டலின் மேல் பகுதியில் ஏற்பட்ட தீ மளமளவென மற்றப் பகுதிகளுக்கும் பரவத்தொடங்கியது. உடனடியாக தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் ஹோட்டலுக்கு விரைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். இந்த விபத்தில் 9 பேர் தீயில் சிக்கி உடல்கருகி பலியானார்கள். மேலும், பலர் தீவிபத்தில் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

விபத்து

சுமார் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சுமார் 20-க்கும் மேற்பட்ட தீயணைப்புப் படை வாகனங்கள் வந்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க