‘அவரைப் பார்க்கவே பிரமிப்பாக இருந்தது!’- பிரதமருடன் பேசிய தருணம் குறித்து நெகிழ்ந்த சிறுவன் | PM Narendra Modi served meal to schoolchildren by Akshaya Patra foundation

வெளியிடப்பட்ட நேரம்: 11:51 (12/02/2019)

கடைசி தொடர்பு:13:02 (12/02/2019)

‘அவரைப் பார்க்கவே பிரமிப்பாக இருந்தது!’- பிரதமருடன் பேசிய தருணம் குறித்து நெகிழ்ந்த சிறுவன்

பெங்களூருவைத் தலைமையிடமாக கொண்டு செயல்படும் அக்‌ஷய பாத்திரம் என்ற தொண்டு நிறுவனம் நாடு முழுவதும் உள்ள பல பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கி வருகிறது. இந்த நிலையில், அதை விரிவுபடுத்தும் விதமாக உத்தரப்பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட 12 மாநிலங்களில் அந்த அரசுடன் இணைந்து நாடு முழுவதும் உள்ள சுமார்  30 லட்சம் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கியது. 

பிரதமர் மோடி

நேற்று உத்தரப்பிரதேசம் மாநிலம் மதுராவில் உள்ள விருந்தாவனத்தில் மாணவர்களுக்கு உணவு வழங்கி இந்தத் திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். பிரதமர் மோடி அனைத்து மாணவர்களுக்கு உணவு பரிமாறி உபசரித்தார். அப்போது ஒரு சிறுவனிடம் சென்று, ‘நீங்கள் எப்போதும் 12 மணிக்கு மதிய உணவு சாப்பிடுவீர்கள். ஆனால், இன்று நான் தாமதமாக நிகழ்ச்சிக்கு வந்ததால் உங்களுக்கு உணவு வழங்கவும் சற்று தாமதமாகிவிட்டது அல்லவா’ எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு அந்தச் சிறுவன் எதுவும் பதிலளிக்கவில்லை. அப்போது அவனுக்கு அருகில் அமர்ந்திருந்த சிறுமி குறுக்கிட்டு, ‘ நாங்கள் காலை உணவை முடித்துக்கொண்டுதான் இங்கு வந்தோம்’ எனப் பதிலளித்துள்ளார்.

மோடி

மாணவர்களுடன் தான் பேசும் வீடியோவை தன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, ‘ மாணவர்களுடன் சிறப்பான கலந்துரையாடல் நடைபெற்றது. உணவு வழங்க தாமதமானது குறித்து மாணவர்கள் பெரிதாக கவலைப்படவில்லை’ எனப் பதிவிட்டுள்ளார். இது சமூகவலைதளத்தில் அதிகம் கவனம் ஈர்த்துள்ளது.

மோடி

மேலும், இதுபற்றி பி.டி.ஐ ஊடகத்துக்குப் பேட்டியளித்துள்ள ஆறாம் வகுப்பு சிறுவன் ரூபேஷ், ‘ நேற்று நடந்த அக்‌ஷய பாத்திரம் நிகழ்ச்சியில் நானும் கலந்துகொண்டேன். நான் உணவருந்திக்கொண்டிருக்கும்போது பிரதமர் மோடி அருகில் வந்து என்னிடம் பேசினார். அவரை அருகில் பார்த்தது எனக்கு மிகவும் பிரமிப்பாக இருந்தது. அவர் என்னிடம் வந்து, ‘ நீ நன்றாக சாப்பிடுகிறாயா இல்லையா, தினமும் விளையாடுவாயா’ எனக் கேட்டார். பிறகு  ‘உங்கள் ஆசிரியர்கள் சரியான நேரத்துக்கு உணவு வழங்குகிறார்களா என்றும் என்னிடம் கேட்டார்” என அந்தச் சிறுவன் தெரிவித்துள்ளார்.