`அவர் தவறான நோக்கத்தில் நடக்கவில்லை!’ - சர்ச்சைக்கு விளக்கமளித்த திரிபுரா பெண் அமைச்சர் | Tripura Minister Seen Groping Colleague On PM Stage

வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (12/02/2019)

கடைசி தொடர்பு:17:20 (12/02/2019)

`அவர் தவறான நோக்கத்தில் நடக்கவில்லை!’ - சர்ச்சைக்கு விளக்கமளித்த திரிபுரா பெண் அமைச்சர்

திரிபுராவில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடைபெறுகிறது. முதல்வராக பிப்லெப் குமார் உள்ளார். அகர்தலாவில் கடந்த சனிக்கிழமை திரிபுராவின் கடைசி மன்னர் மகாராஜா பிர் பிக்ரம் சிலை திறப்பு விழா நடந்தது. விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். விழாவின்போது, விளையாட்டுத்துறை அமைச்சர் மனோஜ் காந்த் தெப், சமூகநலத்துறை அமைச்சர் சந்தனாவின்  இடுப்பில் கை வைத்தார். தொடர்ந்து, சந்தனா அமைச்சரின் கையைத் தள்ளிவிடுவது போன்ற வீடியோ இணையத்தில் பரவிவந்தது. 
 

திரிபுராவில் மோடி பங்கேற்ற விழா

அமைச்சர் சந்தனா இது குறித்து எந்த புகாரும் தெரிவிக்கவில்லை. எனினும், அமைச்சர் மனோஜ், தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. திரிபுராவில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் அமர்ந்து 11 மாதங்களில் பாலியல் குற்றச்சாட்டுகள் அதிகரித்துள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. பெண் அமைச்சர் எந்தப் புகாரும் அளிக்காத நிலையில் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு இந்த விஷயத்தைப் பரப்பி வருவதாகப் பாரதிய ஜனதாக் கட்சி தெரிவித்துள்ளது. 

இந்த விவகாரம் குறித்து கருத்துத் தெரிவித்த அமைச்சர் சந்தனா, ``பிரதமர் பங்கேற்ற விழாவில் புகைப்படத்தில் நான் இடம் பெற வேண்டுமென்பதற்காக யதார்த்தமான மனோஜ் காந்தி தெப் செய்த விஷயம் இது. எந்தத் தவறான நோக்கமும் அவரிடத்தில் இல்லை. எதிர்க்கட்சிகள் இந்த விஷயத்தை வைத்து அரசியல் செய்கின்றன’’ என்றார். குற்றச்சாட்டுக்குள்ளான அமைச்சர் மனோஜ், ``இந்த விவகாரம் எதிர்க்கட்சிகளின் தரத்தை எடுத்துக் காட்டுகிறது’’ என்று தெரிவித்துள்ளார். 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க