ராஜஸ்தானில் குஜ்ஜார் மக்களுக்கு 5% இடஒதுக்கீடு! | Rajasthan introduce reservation for gujjar

வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (14/02/2019)

கடைசி தொடர்பு:08:01 (14/02/2019)

ராஜஸ்தானில் குஜ்ஜார் மக்களுக்கு 5% இடஒதுக்கீடு!

ராஜஸ்தானில், குஜ்ஜார் சமூகத்தைச் சார்ந்த மக்கள்,  கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி, கடந்த 2007-ம் ஆண்டுமுதல் போராட்டம் நடத்திவருகின்றனர். கடந்த 2017-ம் ஆண்டு, ஆட்சியில் இருந்த பி.ஜே.பி அரசு, இடஒதுக்கீடு வழங்குவதற்கான வாக்குறுதியை அளித்து, அதற்கான மசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல்செய்தது. அதன் பின்னர், குஜ்ஜார் வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கு  எதிராக வழக்கு தொடரப்பட்டதால் அந்த மசோதா நிறுத்திவைக்கப்பட்டது. கடந்த ஜனவரி மாதம், பொருளாதாரரீதியாக பின்தங்கியவர்களுக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்கும் மசோதா நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேறியது.

குஜ்ஜார் இடஒதுக்கீடு போராட்டம்

இந்நிலையில், கடந்த பிப்ரவரி 8-ம் தேதி முதல் குஜ்ஜார் சமூகத்தைச் சார்ந்த மக்கள்,மாநிலம் தழுவிய அளவில் ரயில் மறியல், சாலை மறியல்  உள்ளிட்ட தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். இதனால் டெல்லி,மும்பை செல்லும் இரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. இந்நிலையில், ராஜஸ்தானில் ஐந்தாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள காங்கிரஸ் கட்சிக்கு இந்தப்போராட்டம் சவாலாக இருந்த நிலையில், குஜ்ஜார் உள்ளிட்ட ஐந்து வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில்                                                                5 சதவிகித இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்திருத்த மசோதாவை அம்மாநில சட்டப்பேரவையில், அமைச்சர் பி.டி.கல்லா தாக்கல் செய்துள்ளார்.