`அவர் இல்லாத முதல் காதலர் தினம்!' - ஆணவக்கொலையால் பாதிக்கப்பட்ட நீனு உருக்கம் | still kevin is alive; life goes with him says, neenu, a honour killing victim

வெளியிடப்பட்ட நேரம்: 15:18 (14/02/2019)

கடைசி தொடர்பு:15:18 (14/02/2019)

`அவர் இல்லாத முதல் காதலர் தினம்!' - ஆணவக்கொலையால் பாதிக்கப்பட்ட நீனு உருக்கம்

கெவின் இடத்தில் வேறு யாரையும் நினைத்துப் பார்க்க முடியவில்லை என்று கேரளாவில் ஆணவக் கொலைக்கு கணவரைப் பறிகொடுத்த நீனு கூறியுள்ளார்.

ஆணவக்கொலையால் கணவரை இழந்த நீனு

கேரளாவில் கடந்த மே மாதத்தில் கெவின் என்ற இளைஞர் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டார். பட்டியலினத்தைச் சேர்ந்த கெவின் உயர்சாதி வகுப்பைச் சேர்ந்த கிறிஸ்வ பெண் நீனு சாக்கோவை காதலித்து திருமணம் செய்தார். இதனால், ஆத்திரமடைந்த நீனுவின் தந்தை, சகோதரர் கூலிப்படையை ஏவி கெவினை கொலை செய்தனர். கெவின் கொலையான பிறகு நீனு கோட்டயம் அருகே உள்ள கணவரின் கிராமத்தில் மாமனார் வீட்டிலேயே வசித்து வருகிறார். கல்லூரிக்கும் சென்று படிப்பைத் தொடர்கிறார். காதலர் தினத்தையொட்டி மாத்ரூபூமி நாளிதழுக்கு நீனு அளித்துள்ள பேட்டியில், ``என் தந்தை, சகோதரரால் கெவினின் உடலைத்தான் என்னிடம் இருந்து பிரிக்க முடிந்தது. உயிரை அல்ல. இன்னும் என்னுடன்தான் கெவின் இருக்கிறார்.

ஆணவக்கொலை செய்யப்பட்ட கெவின் மற்றும் நீனு

என் கணவர் கெவின் இடத்தில் வேறு யாரையும் என்னால் யோசித்துப் பார்க்க முடியவில்லை. 2016-ம் ஆண்டு கெவினை காதலிக்கத் தொடங்கினேன். இப்போதும் காதலிக்கிறேன். என் பெற்றோரிடத்தில் இல்லாத அன்பும், அக்கறையும், கனிவையும் நான் அவரிடத்தில் கண்டேன். என்னை ஒவ்வொரு விஷயத்திலும் உற்சாகப்படுத்துவார். ஏதோ விளையாட்டு வாக்கில் நாங்கள் காதலிக்கவில்லை.. பல விஷயங்கள் ஆழமாக யோசித்தே முடிவு எடுத்தோம். கடந்த காதலர் தினத்தில் கெவின் துபாயில் இருந்தார். பிப்ரவரி 14-ம் தேதி எனக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்காகவே கரடி பொம்மை, சாக்லேட்டுடன் இன்னும் ஏராளமான பரிசுகளுடன் திடீரென்று என் முன்னால் வந்து நின்றார். அவரில்லாத முதல் காதலர் தினம். இந்தக் காதலர் தினத்தில் நான் கோயிலுக்குச் செல்கிறேன். வெறுமையா இருப்பதாக நான் உணரவில்லை. என்னுடன் கெவின் வாழ்ந்து கொண்டிருக்கிறார்'' என்று கூறியுள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க