முதல் பத்திரிகையாளர் சந்திப்பை ரத்துசெய்த பிரியங்கா காந்தி! | Priyanga gandhi canceled her first press meet

வெளியிடப்பட்ட நேரம்: 09:00 (15/02/2019)

கடைசி தொடர்பு:09:00 (15/02/2019)

முதல் பத்திரிகையாளர் சந்திப்பை ரத்துசெய்த பிரியங்கா காந்தி!

ம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் நடத்திய  பயங்கரவாத தாக்குதலில் 42 சி.பி.ஆர்.எஃப் வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொது மக்கள் என அனைவரும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

பிரியங்கா காந்தி, இராகுல் காந்தி

கடந்த ஆண்டின் இறுதியில், காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்றார். இந்தியாவின் அதிக மக்களவைத் தொகுதிகளைக் கொண்டுள்ள உத்தரப்பிரதேச மாநிலத்தில், கடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் பெரும் தோல்வியைச் சந்தித்தது.  2019-ம் ஆண்டுக்கான நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர்களான மாயாவதியும், அகிலேஷ் யாதவும் நாடாளுமன்றத்திற்கான கூட்டணி அறிவித்த நிலையில், உத்தரப்பிரதேச மாநில கிழக்குப் பகுதி பொறுப்பாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டுள்ளார் .இந்நிலையில், பிரியங்கா காந்தி முதல் முறையாக பத்திரிகையாளர் சந்திப்பை அறிவித்திருந்தார். ஜம்மு- காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, ஏற்பாடு செய்திருந்த  பத்திரிகையாளர் சந்திப்பை  ரத்துசெய்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ இது மாதிரியான நேரத்தில் அரசியல்குறித்துப் பேசுவது பொருத்தமாக அமையாது. பயங்கரவாத தாக்குதல்களில் உயிரிழந்த வீரர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இது மாதிரியான சம்பவங்கள் இனி நிகழாமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்”  என்று தெரிவித்துள்ளார்.


[X] Close

[X] Close