`இன்னொரு மகனையும் ராணுவத்துக்கு அனுப்புவேன்!'- வீரமரணமடைந்தவரின் தந்தை உருக்கம் | Ready to give up my other son says CRPF Personnel Ratan Thakur's father

வெளியிடப்பட்ட நேரம்: 13:17 (15/02/2019)

கடைசி தொடர்பு:15:38 (17/02/2019)

`இன்னொரு மகனையும் ராணுவத்துக்கு அனுப்புவேன்!'- வீரமரணமடைந்தவரின் தந்தை உருக்கம்

`தாய்நாட்டுக்கு சேவை செய்ய சென்ற எனது மகனை இழந்திருக்கிறேன். என் அடுத்த மகனையும் ராணுவத்துக்கு அனுப்புவேன்' என்று ஜம்முவில் வீரமரணமடைந்தவரின் தந்தை கூறியுள்ளார்.   

தந்தை

ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டம் அவாந்திபோரா பகுதியில் ஸ்ரீநகர் - ஜம்மு நெடுஞ்சாலையில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்கள். 78 வாகனங்களில் 2,500 வீரர்கள் சென்றுகொண்டிருந்தனர். அப்போது சுமார் 350 கிலோ வெடிமருந்து நிரப்பிய கார், சி.ஆர்.பி.எஃப் சென்றுகொண்டிருந்த வாகனத்தின் மீது மோதி வெடித்தது. இந்தக் கோரவிபத்தில் 44 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் வீரமரணமடைந்துள்ளனர். கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத மோசமான தாக்குதல் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தக் கோர தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு வீரர்களும் வீரமரணமடைந்துள்ளனர்.

துயரம்

அழுகை; ஆற்றாமையுடன் அவர்களது குடும்பங்கள் சோகத்தில் மூழ்கிக் கிடக்கின்றன. பயங்கரவாதத்துக்கு எதிராக நாட்டு மக்கள் ஒன்றிணைந்துள்ளனர். உரிய பதிலடி கொடுக்கவேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகின்றது. தமிழகத்தைச் சேர்ந்த மற்றொரு வீரரின் உடலைத் தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நாட்டையே உலுக்கியுள்ள இச்சம்பவம் குறித்து உலகத்தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்தத் தாக்குதலில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரதன் தாகூர் என்ற வீரரும் மரணமடைந்துள்ளார். இறப்புச் செய்தியால் அவரது குடும்பமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

சோகத்தில் குடும்பம்

 

தனது மகன் நாட்டுக்காக உயிர்நீத்துள்ளது குறித்து அவர் தந்தை பேசியவார்த்தைகள், அவரது நாட்டுப்பற்றைப் பறைசாற்றும் விதமாக அமைந்துள்ளது. ``தாய் நாட்டின் சேவைக்காக என் மகனை தியாகம் செய்தேன். என் இன்னொரு மகனையும் தேசத்துக்காகப் போராட அனுப்புவேன். அதற்கும் நான் தயாராக இருக்கிறேன். ஆனால் இந்தச் சம்பவத்துக்கு பாகிஸ்தான் தக்க பலனை அனுபவிக்கும்'' என்று கண்களில் நீர்வடிய தெரிவித்துள்ளார். அதேபோல பஞ்சாப்பைச் சேர்ந்த மஹிந்தர் சிங் குடும்பத்தினர், மகனின் இழப்பைக் கேட்டு அதிர்ச்சியடைந்தனர். ஏழ்மையில் வாடும் வாரணாசியைச் சேர்ந்த ரமேஷ் யாதவ் குடும்பத்தினர் மகன் இழப்பை ஏற்க முடியாமல் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்


[X] Close

[X] Close